21 மார்ச் 2011

கல்வி குறும்பட போட்டி: இஸ்லாமிய மாணவர் அமைப்பு ஏற்பாடு!

இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பின் சார்பில் 'இந்தியாவில் கல்வி' எனும் தலைப்பில் குறும்படப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கல்வி, மற்றும் அதற்கான சூழல் குறித்த தங்கள் குறும்படங்களுடன் மாணவர்களும் இளைஞர்களும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.

இது தொடர்பாக இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "எந்த கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவரும் இதில் பங்கேற்கலாம். அனுமதி இலவசம். வரும் மார்ச் 30-ம் தேதி முதல் போட்டிக்கான படங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏப்ரல் 20ம் தேதி கடைசி நாள்.

குறும்படங்களுக்கான கால அளவு 8 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும். டிவிடி தொழில்நுட்பத்தில் அமைந்திருப்பது அவசியம். ஒவ்வொரு குறும்படத்துடனும் அதன் கதைச் சுருக்கம், கலைஞர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் பற்றிய விவரங்கள் கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும்.

நடுவர்குழுவால் வெற்றிப் படங்கள் தேர்வு செய்யப்படும். இந்தப் படங்கள் பின்னர் இஸ்லாமிய மாணவர் அமைப்பின் குறும்பட விழாவில் திரையிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு: குறும்பட போட்டி, கலாச்சார பேரவை, இஸ்லாமிய மாணவர் அமைப்பு தமிழ்நாடு மண்டலம், 6/5 இருசப்பன் தெரு, சென்னை என்ற முகவரியில் அணுகலாம். அல்லது CulturalForum@siotamilnadu.org என்ற
மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி (செய்தி ) :- தட்ஸ்தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக