விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 10 வேட்பாளர்களும் அறிவிப்பு
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் பத்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
வேட்பாளர்கள் விவரம்:
காட்டுமன்னார்கோவில் - துரை. ரவிக்குமார்
சோழிங்கநல்லூர் - பாலாஜி
செய்யூர் - பார்வேந்தன்
அரக்கோணம் - செல்லப்பாண்டியன்
திட்டக்குடி - சிந்தனைச் செல்வன்
சீர்காழி - உஞ்சை அரசன்
அரூர் - நந்தன்
கள்ளக்குறிச்சி - பாவரசு
உளுந்தூர்ப்பேட்டை - முகம்மது யூசுப்
ஊத்தங்கரை - முனியம்மாள் கனியமுதன்
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் , கூட்டணி கட்சி தலைவர்களை மதித்து அரவணைத்து வழிநடத்தி செல்லும் தலைவராகவும், மிகுந்த சாதுர்யமிக்க தலைவராகவும் முதல்வர் கருணாநிதி விளங்குகிறார்.
திமுக கூட்டணி வலுவான கூட்டணியாக அமைந்துள்ளது. திமுக சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகள் கேட்போம். திமுக கூட்டணி மகத்தான வெற்றியை பெறும். வடமாவட்டங்களில் எங்கள் கூட்டணி 150 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிவாகை சூடும். ஒரே மேடையில் தலைவர்கள் பேசுவது குறித்தும் கருத்துகளை பரிமாற்றம் செய்தோம். வரும் 23ந் தேதி திருவாரூரில் ஒருங்கிணைந்த பிரசாரத்தை தொடங்குகிறோம் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக