முஸ்லிம் லீக் ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்தது தேசிய தலைவர், மத்திய அமைச்சர் இ.அஹ்மது விளக்கம்
மதசார்பற்ற கட்சிகளுக் கிடையே ஒற்றுமையை வளர்ப் பதற்காக கூட்டணி கட்சி களை ஒருங்கிணைப்பதற் காக திமுக-காங்கிரஸ் கூட் டணியை ஏற்படுத்துவதற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துள்ளது என இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத்துறை இணைய மைச்சருமான இ.அஹ்மது குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்ற தேர்த லுக்கு, காங்கிரஸ்-தி.மு.க. கூட்ட ணியில் ஏற்பட்ட இறுக்கமான சூழ்நிலை யில், இருதரப்பின ரிடமும் கலந்து பேசி ஒரு சுமுக சூழலை ஏற்படுத்தும் முயற்சியை முஸ்லிம் லீக் மேற் கொண்டது. இது பற்றி, எங்கள் கட்சியின் தமிழ் நாடு நிர்வாகிகளுடனும் கலந்து பேசினேன்.
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கி ரஸ், தி.மு.க., முஸ்லிம் லீக் மற்றும் அதில் அங்கம் வகிக்கும் கட்சி களுக்கு இடையே ஒரு இணக்கமான சூழலை, ஒற்று மையை, உருவாக்க வேண் டும் என்ற ஒரே நோக்கத்து டன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல்பட்டது. மதச்சார் பற்ற கட்சிகளுக்கு இடையே ஒற்றுமையை வளர்ப் பதற்காக, கூட்டணிக்கட்சி களை ஒருங்கிணைப்பதற் காக இந்திய யூனியன் முஸ் லிம் லீக் கட்சி எப்போதுமே மிகக் கடுமையாக உழைக் கும்.
இவ்வாறு இ.அகமது கூறி உள்ளார்.
நடந்தது என்ன?
திமுக-காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்பட டெல்லியில் நடைபெற்ற முயற் சிகள் பற்றி டெல்லி செய்தியாளர் தரும் செய்தி வருமாறு: நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற வேண்டுமென அனைவரும் விரும்பினர். இந்த விருப்பம் நிறைவேறும் என்று இருந்த சூழ்நிலையில் பேச்சு வார்த்தை முறிவ டைந்து மத்திய அமைச்சர வையிலிருந்து தி.மு.க அமைச்சர்கள் விலகிக் கொள் வது என்று முடிவெடுத்தனர்.
பதவி விலகல் கடிதங் களை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுப்பதற்காக திமுகவின் 6 அமைச்சர் களும் டெல்லி சென்றிருந்த னர். திமுக எடுத்திருக்கும் நிலையை தொடர்ந்து மத்தியில் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அர சுக்கு எத்தகைய சிக்கலும் ஏற்படக்கூடாது. அதே நேரம், தமிழகத்தில் டாக்டர் கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு வரும் தேர்தலிலும் தொடர வேண்டும் என அக்கரை கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்த நெருக்கடியான சூழ்நிலை யில் தலையிட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகதீன் வேண்டு கோளின் அடிப்படையில் தேசிய தலைவரும், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான மாண்புமிகு இ. அஹமது சாஹிப் டெல்லி யில் காங்கிரஸ் - தி.மு.க. தலைவர்களுடன் இதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.
07-03-2011 திங்கள் முதல் தொடர்ந்து அவர் மேற்கொண்ட முயற்சியின் பலனாக நல்ல இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டது. திமுக அமைச்சர்கள் பதவி விலகல் முடிவை ஒரு நாள் ஒத்திவைக்குமாறு காங்கிரஸ் தலைமை கேட்டுக் கொண்டது.
கடைசி நேர முயற்சிகள்
திமுக-காங்கிரஸ் உடன் பாட்டை எப்படியும் முடிவுக்கு கொண்டுவர 08.03.2011 செவ்வாய் அன்று காரியங் கள் முடுக்கிவிடப்பட்டன. மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸின் மூத்த தலை வருமான பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் காங்கிரஸ் செயலாளரும், சோனியாவின் அரசியல் ஆலோசகருமான அஹமது பட்டேல், குலாம் நபி ஆசாத், தி.மு.க மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோரை உடன் இருந்து பேச வைத்தார் இ. அஹமது.
63 இடங்கள் வேண்டு மென்பதில் காங்கிரஸ் உறுதி யுடன் நின்றது. 61 இடம் மட்டுமே இறுதியாக தர முடி யும் என திமுக தரப்பில் உறு தியாக கூறப்பட்டது.
உடன்பாட்டை ஏற்படுத் தியே தீர வேண்டும் என்ற முடிவில் இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தனக்கு ஒதுக்கப்பட்ட மூன்று தொகுதிகளில் ஒன்றை இந் தக் கூட்டணி வெற்றிக் கூட் டணியாக வேண்டும் என்ப தற்காக விட்டுக்கொடுக்க முன்வருகிறது என்று அஹமது சாஹிப் அதிரடி அறிவிப்பை செய்தார்.
இதனை தலைவர் பேரா சிரியருக்கு தெரிவித்தார்.
ஒரு இடத்தை விட சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான மத்திய, மாநில அரசுகள் தொடரச் செய்வதே புத்திசாலித்தனமானது என்பதால் அந்த முடிவிற்கு தமிழ்நாடு மாநிலத் தலைமை சம்மதம் தெரிவித்தது.
அதைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி ஒரு இடத்தையும் இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் ஒரு இடத் தையும் விட்டுக் கொடுப்ப தென்று முடிவு செய்யப்பட்டது.
நேற்று (08.03.2011) மாலை 3.45 மணியிலிருந்து மத்திய அமைச்சர்கள் இ. அஹ்மது, பிரணாப் முகர்ஜி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களி டம் தொலைபேசியில் பேசி நிலவரங்களைக் கூறினர். நிலைமைகளை தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உணர்ந்து ஒரு தொகுதியை விட்டுக் கொடுக்க மாலை 4.30 மணிக்கு சம்மதம் தெரிவித் தார்.
அந்த முடிவை தேசிய தலைவர் இ.அஹ்மதுக்கு தெரிவித்தபோது, அதனை முறைப்படி திமுக தரப்பிற்கு தெரிவிக்குமாறு அவர் கேட் டுக் கொண்டதின் அடிப்படை யில் மத்திய அமைச்சர் தயா நிதி மாறனிடம் தொலைபேசி மூலம் பேராசிரியர் தகவல் தெரிவித்தார். இந்த தகவல் கிடைத் பின்பு காங்கிரஸ்-திமுக தலைவர்கள் சோனியாவின் இல்லத்திற்கு விரைந்தனர்.
தி.மு.க - காங்கிரஸ் உடன்பாடு சோனியா காந்தி யின் இல்லத்தில் குலாம் நபி ஆசாத்தால் அறிவிக்கப்பட் டது. தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான கூட்டணி யில் மகிழ்ச்சி ஏற்பட்டது.
முதல்வர் கலைஞர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் கூட் டணி இறுதி நிலவரம் பற்றி அறிவித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இந்த மகத்தான முயற் சிக்கு தி.மு.க தலைவர் கலை ஞர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மனமார்ந்த நன்றி தெரிவித்தனர்.
இ.யூ.முஸ்லிம் லீகர்களுக்கு விளக்கம்
முதல்வர் கலைஞர், பிரணாப் முகர்ஜி, அஹ்மது பட்டேல் உள்ளிட்டோர் இந் திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களிடம் நன்றி தெரி வித்தனர்.
திமுக-காங்கிரஸ் உடன் பாடு கூட்டணி கட்சிகளி டையே மிகப்பெரும் மகிழ்ச் சியை ஏற்படுத்தினா லும், ஒரு இடம் இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் விட்டுக் கொடுத்ததை தாய்ச்சபை ஊழியர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.
என்ன நடந்தது என்பது தெரியாத கட்சித் தொண்டர் கள் தலைமை நிலையத்திற்கு விடிய, விடிய தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட வண்ணம் இருந்தனர். அவர்களுக்கு விளக்கங்கள் தரப்பட்டன.
தாய்ச்சபை தலைவர்கள் மேற்கொண்ட இந்த முடிவு ஊழியர்களிடையே இப்போது மனக்குறையை ஏற்படுத்தினா லும், எதிர்காலத்தில் அகில இந்திய அளவில் முஸ்லிம் சமுதாயத்திற்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கும் மிகச் சிறந்த பலன்களை பெற்றுத் தரும் என்பதே உண்மை.
மூன்றில் ஒன்று போனால் இரண்டல்ல... சற்று பொறுத்திருந்து பாருங்கள் - நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான்
""வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3 இடங்களைப் பெற்று, கூட்டணியின் ஒற்றுமையை நிலை நிறுத்த காங்கிரஸ் கேட்ட மேலும் 3 தொகுதிகளுக்கான தீர்வு தி.முக - 1, பா.ம.க -1, என்றிருந்த நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்து தியாகம் செய்ததை நாடறியும், இந்த அரசியல் பெருந்தன்மை டெல்லியில், குறிப்பாக தேசிய அளவிலான அரசியலில் தாய்ச்சபைக்கு ஒரு தனிச் சிறப்பைத் தேடித்தந்தது.
ஒரு தொகுதி குறைந்தால் நம்மில் பலர் தாய்ச்சபை முஸ்லிம் லீக் மீது கொண்ட பற்றுதலின் காரணமாக கொதித்தெழுகின்றனர், குமுறுகின்றனர். ஒரு தொகுதி குறைந்ததில் யாருக்கு மகிழ்ச்சி? எல்லோருக்கும் கவலைதான். ஆனால் தொலை நோக்குச் சிந்தனையோடு, மதவாத சக்திகளுக்கு இடம் தரக் கூடாது என்ற ஒரே நோக்கில், மாநிலத்திலும், மத்தியிலும் நல்லாட்சிகள் நீடிக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு புது வியூகம் அமைத்து, தாமாகவே முன் வந்து ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துப் பெரும்பங்காற்றி இந்திய அரசியல் வரலாற்றில் தனி முத்திரையைப் பதித்துள்ளது.
தாய்ச்சபை தலைமையின் இந்த முடிவு மூன்றில் ஒன்று போனால் இரண்டல்ல. அது வேறு என்பதனை நிரூபணம் செய்யும். சற்று பொறுத்திருந்து பாருங்கள்��.
-தமிழ் மாநில தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப் தமது அமைப்பை கலைத்து விட்டுஇந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்த நிகழ்ச்சியில் அவரை வரவேற்று நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் ஆற்றிய உரையிலிருந்து. .......

செய்தி :- http://www.muslimleaguetn.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக