வாஷிங்டன்:விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க தூதரக கேபிள் செய்தியைத் தொடர்ந்து மெக்சிகோ நாட்டிற்கான அமெரிக்க தூதர் தனது பதவியை ராஜினாமாச் செய்துள்ளார்.
போதைப் பொருள் மாஃபியாவுக்கு எதிராக மெக்ஸிகோ நடத்தும் போராட்டத்தை அமெரிக்க தூதர் கார்லோஸ் பாஸ்கல் விமர்சித்ததாக விக்கிலீக்ஸ் நேற்று முன்தினம் வெளியிட்ட கேபிள் செய்தி கூறுகிறது. இதற்கு மெக்ஸிகோ அதிபர் ஃபெலிப் கார்ல்டேர் கடும் கண்டனத்தை அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து கார்லோஸ் பாஸ்கல் தனது பதவியை ராஜினாமாச் செய்தார். பாஸ்கலின் ராஜினாமாவை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் உறுதிச் செய்துள்ளார்.
நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக