09 மார்ச் 2011

ரஃப்ஸஞ்சானிக்கு ஈரானின் ஆன்மீக உயர்பீட சபையின் தலைவர் பதவி பறிபோனது

டெஹ்ரான்,மார்ச்.9:ஈரான் நாட்டின் உயர் ஆன்மீக அறிஞர்கள் சபையின் தலைவர் பதவியை ஈரானின் முன்னாள் அதிபர் ஹஸ்மி ரஃப்ஸஞ்சானி இழந்துள்ளார்.

நாட்டின் உயர் தலைமையை தேர்வுச் செய்யும் சபையாக இவ்வமைப்பு கருதப்படுகிறது.

அண்மைக் காலங்களில் ரஃப்ஸஞ்சானி எதிர்க்கட்சியினருடன் நெருக்கத்திலிருப்பதாக விமர்சனம் எழுந்தது. ஆயத்துல்லாஹ் முஹம்மது ரிஸ் மெஹ்தி கனி ரஃப்ஸஞ்சானிக்கு பதிலாக பதவி ஏற்பார் என செய்தி நிறுவனம் ஒன்று கூறுகிறது.

கனிக்கு எதிராக போட்டியிடமாட்டேன் என ரஃப்ஸஞ்சானி அறிவித்துள்ளார். 'சபையின் தலைவர் பதவி என்ற பொறுப்பை ஏற்றுக்கொள்ள கனி தயாரானால் நான் போட்டியிடமாட்டேன். இதன்மூலம் கருத்து வேறுபாட்டை களையலாம். எனது புறத்திலிருந்து இந்த பரிசுத்தமான நிறுவனத்திற்கு களமேற்படாது.' என ரஃப்ஸஞ்சானி தெரிவித்துள்ளார்.

செய்தி:மாத்யமம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக