23 மார்ச் 2011

இந்திய சட்டம் குறித்து அம்னஸ்டி

சர்வதேச அபய ஸ்தாபன இலட்சினை

இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கானோரை விசாரணையின்றி தடுத்து வைக்க பயன்படுத்தப்படுவதாக தாம் கூறும் ஒரு சட்டத்தை மனித உரிமை அமைப்பான சர்வதேச மன்னிப்புச் சபை விமர்சித்துள்ளது.

பொதுப் பாதுகாப்புச் சட்டம் என்னும் இந்தச் சட்டத்தின் கீழ், அரசுக்கு அச்சுறுத்தலாக திகழ்வதாக கருதப்பட்டால், மக்களை இரு வருடங்கள் வரை குற்றச்சாட்டுக்கள் எதுவும் சுமத்தப்படாமல் தடுத்து வைக்க முடியும்.

ஆனால், முறையான சட்ட வழிகளில் தண்டிக்கப்பட முடியாதவர்களை அடைத்து வைப்பதற்கு இதனை இந்திய நிர்வாகம் பயன்படுத்துவதாக, தனது புதிய அறிக்கை ஒன்றில் சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

1989 இல் காஷ்மீரில் இந்திய ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி ஒன்று ஆரம்பமானதை அடுத்து இதுவரை இந்தச் சட்டத்தின் கீழ் சுமார் இருபதினாயிரம் பேர்வரை தடுத்து வைக்கப்பட்டு வந்திருப்பதாக அது மதிப்பிட்டிருக்கிறது.

இந்தச் சட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்று மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

நன்றி (செய்தி ) :-  bbc தமிழோசை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக