23 மார்ச் 2011

அமெரிக்க விமானம் விழுந்தது லிபிய விவகாரம்: சர்வதேச முரண்பாடுகள்

லிபியாவில் மேற்குலக நாடுகள் முன்னெடுத்துவரும் ராணுவ தலையீடு குறித்த ரஷ்யாவின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியிருக்கிறது.

இதற்காக அமெரிக்காவின் பாதுகாப்பு செயலர் ராபர்ட் கேட்ஸ், மாஸ்கோ சென்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் அனட்டோலியன் ஸ்யேர்டியூக்கோஃப் ஐ சந்தித்து பேசினார்.

மேற்குலக நாடுகளின் படைகள் லிபியாவில் பொதுமக்களின் உயிரிழப்புக்களை தவிர்ப்பதற்காக பெரும் முயற்சிகள் எடுத்துவருவதாக அவர் அப்போது கூறினார்.

மேலும் அடுத்த சில நாட்களில் லிபியாவில் நடக்கும் சண்டைகள் குறையத்துவங்கும் என்று தாம் ரஷ்ய அமைச்சரிடம் கூறியதாகவும் கேட்ஸ் தெரிவித்தார்.

அதேசமயம் லிபியாவில் உடனடியாக போர்நிறுத்தம் ஏற்படுத்துவதே பொதுமக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கும் வழி என்று ஸ்யேர்டியூக்கோஃப் தெரிவித்தார்.

அமெரிக்க விமானம் விழுந்தது

இதேவேளை
லிபியாவில் கேணல் கடாபியின் படைகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்கும் சர்வதேச நடவடிக்கையின் போது அமெரிக்க போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த எஃப் 15 போர் ஜெட்டின் உடைந்த பாகங்களைச் சுற்றி மக்கள் கூட்டம் காணப்படுவதை தொலைக்காட்சி படங்கள் காண்பித்தன.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது வீழ்ந்ததாக அமெரிக்க இராணுவம் கூறுகிறது.

விமானத்திலிருந்து தப்பிக் குதித்த இரண்டு விமானிகளும் மீட்கப்பட்டு விட்டனர்.

லிபியாவில் கேணல் கடாபிக்கு ஆதரவான படைகளுக்கும், கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையே சண்டைகள் தொடருகின்றன.

ஷெல் தாக்குதலும், கண்மூடித்தனமான துப்பபாக்கிச் சூடுகளும் நகரில் இடம்பெற்றதாக மேற்கு நகரான மிஸ்ரட்டாவில் உள்ள மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒரு இரவில் மாத்திரம் 22 பேர் இறந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய நககரான அஜ்டாபியாவைச் சுற்றிலும், ஷிண்டானிலும் மற்றும் திரிபோலிக்கு தென்மேற்கிலும் கூட தொடர்ந்தும் சண்டைகள் இடம்பெறுகின்றன.


நன்றி (செய்தி ) :-  bbc தமிழோசை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக