சென்னை: தமிழக போலீஸ் டிஜிபி லத்திகா அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். தமிழக தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த சில நாட்களுக்கு முன் தலைமை தேர்தல் ஆணையர் குரோஷி சென்னைக்கு வந்தார். அப்போது தமிழக போலீஸ் டிஜிபி லத்திகா மற்றும் சில உயர் அதிகாரிகளை மாற்றம் செய்ய சில கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இந்தநிலையில், டிஜிபி லத்திகா சரண், நேற்று இரவு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய டிஜிபியாக போலோநாத் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல சென்னை மற்றும் புறநகரில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்த கமிஷனர் ஜாங்கிட் தேர்தல் விதிமுறையின்படி மாற்றப்பட வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பரிந்துரைத்தார்.
இதனால், ஜாங்கிட் மாற்றப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குநராக உள்ள கரன் சின்கா, புறநகர் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்மண்டல ஐஜி பாலசுப்பிரமணியம் மாற்றப்பட்டு, சிபிசிஐடி ஐஜி மஞ்சுநாதா அந்த இடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல மதுரை கமிஷனர் பாரி மாற்றப்பட்டு போலீஸ் அகடமி ஐஜி கண்ணப்பன் அந்த இடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக