புதுடெல்லி:ராணுவ மரியாதைகளை மீறி குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கு பொது நிகழ்ச்சியில் புகழாரம் சூட்டிய ராணுவ மேஜர் ஜெனரலிடம் ராணுவ தலைமையகம் விளக்கம் கேட்டுள்ளது.
கோல்டன் கத்தார் டிவிசனின் கமாண்டிங் ஆபீஸர் மேஜர் ஜெனரல் ஐ.எஸ்.சின்கா அரசியல் வாதிகளே தோற்றுப்போகும் வகையில் பொது நிகழ்ச்சியில் வைத்து மோடியை புகழ்ந்து தள்ளினார். மோடி நடவடிக்கை ராணுவ கமாண்டருக்கு சமமானது எனக் கூறவும் மேஜர் சின்கா தயங்கவில்லை.
‘ராணுவத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்’ என்ற பெயரில் 3 நாள் கண்காட்சி அஹ்மதாபாத்தில் ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில்தான் மேஜரின் மோடி புகழாரம் இடம்பெற்றது. அப்பொழுது மேடையில் மோடியும் அமர்ந்திருந்தார்.
மேலும் ராணுவ மேஜர் கூறியதாவது:”மிகச்சிறந்த ராணுவ அதிகாரியாக பதவி வகிக்க மோடிக்கு எல்லாவித தகுதியும் உண்டு(?). நாட்டையும், மாநிலத்தையும் வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்லும்(?) திட்டங்கள்தாம் அவருடையது. ராணுவம் போலவே அவர் நடந்துக் கொள்கிறார்.
திட்டங்களை நிறைவேற்ற அவர் ஒரு கால வரையறையை நிர்ணயிப்பார். அதற்குள்ளாக அந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது என்பதை உறுதிச் செய்வார்” என தெரிவித்தார் மேஜர்.
சின்காவின் மோடி புகழாரம் டெல்லி ராணுவ தலைமையகத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. விருந்தினர் என்ற அடிப்படையில் மோடிக்கு மரியாதை செலுத்தலாம். ஆனால், சின்கா கூறியதாக பத்திரிகைகளில் வந்த செய்தி உண்மையானால் அது தீவிரமானதும், கேள்வி எழுப்பப்பட வேண்டியதுமாகும் என ராணுவத்தின் ஸவுத் ப்ளாக் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

செய்தி :- தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக