குவைத் பிரதமரை பதவி விலகக் கோரி குவைத் நாடாளுமன்றம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. துனீசியா,எகிப்தைப் தொடர்ந்து வளைகுடா மற்றும் வட ஆப்ரிக்க நாடுகளில், மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய கிழக்கில் ஜோர்டான், சிரியா, ஈரான், ஈராக் ஆகிய நாடுகளிலும், வளைகுடா பகுதியில் ஓமன், பக்ரைனிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
குவைத்தின் தற்போதைய பிரதமர் ஷேக் நாசர் முகமது அல் அகமது அல் சபா பதவி விலகக் கோரி நேற்று 8 ஆம் தேதி குவைத் நாடாளுமன்றம் முன், மக்கள் திரண்டு போராட வேண்டும் என்று ஏற்கனவே, "ட்விட்டர்' உள்ளிட்ட இணைய சமூக வலை தளங்களில் பிரசாரம் செய்யப்பட்டிருந்தது.
மன்னர் தலைமையிலான அரசு அமைந்துள்ள குவைத்தில் தற்போது, அல் சபா பிரதமராக உள்ளார். அங்கு எதிர்க்கட்சிகளுக்குத் தடை, முன் அனுமதியில்லாமல் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டம் துவங்கிய போது, பார்லி., கட்டடம் முன் கூடிய நூற்றுக்கணக்கானோர், பிரதமர் பதவி விலக வேண்டும்; அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்; புதிய பிரதமர் தலைமையில் புதிய அரசு அமைய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கும் மசோதா கொண்டு வரப்படும் என்று, ஏற்கனவே குவைத் அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தி :-www.inneram.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக