டோக்யோ: ஜப்பானை நிர்மூலமாக்கிய சுனாமியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1000 ஆக உயர்ந்துள்ளது.
ஜப்பானில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அலைகளால் அந்த நாடே சின்னாபின்னமாகிப் போயுள்ளது.
இயற்கையின் இந்த கோரத் தாண்டவத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தலைநகர் டோக்கியோவின் வடமேற்குப் பகுதியில் சுமார் 400 கி.மீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 8.9 அலகுகளாகப் பதிவானது. 33 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன. கார்கள், பஸ்கள், ரயில், வீடுகள் என ஒரு நகரையே கடல் நீர் அடித்துச் சென்றுவிட்டது.
கடலோரப் பகுதிகளில் மின்சாரமும் தொலைத் தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டன.
அலையில் அடித்துச் செல்லப்பட்ட விமானங்கள்:
மியாகி மாநிலத்தில் உள்ள செண்டாய் நகர விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக விமானங்களையும், கார்களையும் அலைகள் தூக்கிச் சென்றன. சில நிமிட நேரத்துக்குள் இந்த விமானங்கள் அனைத்தும் நகரின் வேறொரு மூலைக்கு தூக்கி வீசப்பட்டன.
நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் குடியிருப்புகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை ஒன்றிலும், எரிவாயு கிடங்கு ஒன்றிலும் கட்டுக்கடங்காமல் தீ எரிந்து கொண்டிருக்கிறது.
செண்டாய் நகரின் ஒரு பகுதியில் மட்டும் 200 முதல் 300 உடல்கள் கிடைத்திருக்கின்றன. நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்றும், நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
100 பேருடன் ஒரு கப்பலே முழுகியது...
100 பேருடன் கடல் பகுதியில் வந்துகொண்டிருந்த ஒரு கப்பலை சுனாமி அலைகள் வாரிச் சுருட்டி வீசியதில், கடலுக்குள் மூழ்கிப் போனது கப்பல். அதிலிருந்தவர்களின் கதி தெரியவில்லை.
அணை உடைந்தது:
ஃபுகுஷிமா எனும் பகுதியில் உள்ள பெரிய அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்துவிட்டதாக கியோடா செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதில் சுமார் 1800 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிகிறது. இதில் இறந்தோர் கணக்கு தெரியவில்லை.
இவாகி எனும் நகர் மொத்தமும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. மக்களே இல்லை எனும் அளவுக்கு வெறிச்சோடிப் போயுள்ளது இவாகி நகரம்.
இபாராகி நகர துறைமுகத்தில் ஏற்றுமதிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கார்கள் மொத்தமாக அடித்துச் செல்லப்பட்டு, குப்பைமேடாக குவிந்து கிடக்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக