12 மார்ச் 2011

உ.பி:10 பேர் எரித்துக் கொலை

லக்னோ,மார்ச்.12:உத்தரபிரதேச மாநிலத்தில் கிராமத் தலைவர் ஒருவரின் படுகொலையைத் தொடர்ந்து கோபமடைந்த கிராம மக்கள் ஐந்து குழந்தைகள் உள்பட 10 பேரை எரித்துக் கொலைச் செய்துள்ளனர்.

தீனநாத் சிங் என்ற கிராமத் தலைவரை சிலர் சுட்டுக் கொன்றுள்ளனர். திகாயி என்ற கிராமத்தில் சொத்துத் தகராரைத் தொடர்ந்து இச்சம்பம் நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்த போலீஸ் சிலரை கைது செய்தது. போலீஸ் அவ்விடத்தை விட்டு நகர்ந்த உடனேயே தீனநாத்தின் ஆதரவாளர்கள் அவரைச் செய்த கொலைச் செய்தவர்களின் வீடுகளுக்கு தீவைத்தனர். இச்சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக