08 பிப்ரவரி 2011

கைதிற்கு பயந்து சுவிஸ் பயணத்தை ரத்துச்செய்த ஜார்ஜ் w புஷ்


பெர்ன்,பிப்.:அடுத்தவாரம் திட்டமிட்டிருந்த சுவிஸ் சுற்றுப் பயணத்தில் கைதுச் செய்யப்படுவோம் என பயந்து பயணத்தை ரத்துச் செய்துள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் w புஷ்.

வருகிற 12-ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் நடைபெறவிருகும் நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் பங்கேற்கமாட்டார் என அவரது செய்தித் தொடர்பாளர் டேவிட் ஷேர்ஸர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் கைதுச்செய்யப்பட்டு விடுவோம் என அஞ்சி ஜார்ஜ் புஷ் தனது சுற்றுப் பயணத்தை ரத்துச் செய்ததாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஆனால், இடதுசாரிகளின் போராட்டம்தான் காரணம் என அவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிலிருந்து கைதுச் செய்யப்பட்டவர்களை கொடூரமாக சித்திரவதைச் செய்ததற்காக புஷ்ஷின் மீது வழக்கு பதிவுச்செய்ய தீர்மானித்ததாக மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன.

சுவிட்சர்லாந்தில் சுற்றுப்பயணம் நடத்தவிருக்கும் புஷ்ஷை கைதுச் செய்ய அந்நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஜெனீவா நீதிமன்றத்தில் புஷ்ஷின் மீது சித்திரவதைக் குற்றம் சுமத்தி வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுவிட்சர்லாந்தில் ஜார்ஜ் புஷ் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் ஹோட்டலுக்கு வெளியே போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் ஒரு ஜோடி ஷூக்களுடன் வரவேண்டுமென மனித உரிமை அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.

கடந்த 2008-ஆம் ஆண்டு ஜார்ஜ் புஷ்ஷின் மீது ஈராக்கின் தலைநகர் பாக்தாதில் வைத்து ஷூவை வீசிய முன்ததர் அல் ஸெய்தியின் தீரச்செயலை நினைவுக்கூறும் விதமாகத்தான் இந்நடவடிக்கை என அவ்வமைப்புகள் கூறியிருந்தன.


செய்தி நன்றி:- பாலைவனத் தூது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக