08 பிப்ரவரி 2011

குட்கா, புகையிலையை ப்ளாஸ்டிக்கில் அடைத்து விற்கத் தடை

டெல்லி: நாடு முழுவதும் குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை ப்ளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை விதித்துள்ளது.

இதனால் பான் மசாலா சாஷேக்களை விரைவில் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குட்கா மற்றும் பான் மசாலாக்கள் உபயோகிப்பதால் வாய்ப்புற்று நோய் அதிகம் பாதிப்பதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது.

ஆரம்பத்தில் பான் மசாலாக்கள் விற்க தடைவிதிக்கப்பட்டது. ஆனால் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் விற்கலாம் என மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பான் மசாலா அடைத்து விற்கும் பிளாஸ்டிக் சாஷேக்களால் சுற்றுச்சூழல் பாதிப்பதாக புகையிலைப் பொருள்கள் எதிர்ப்பு குழுக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வற்புறுத்தினர். உச்ச நீதிமன்றத்தில் பொது நலவழக்குகளும் தொடரப்பட்டன.

இதில் உடனடியாக புகையிலை மற்றும் குட்கா அடைத்து விற்கப் பயன்படும் சாஷேக்களைத் தடுக்க உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக