கெய்ரோ: மக்களின் இடைவிடாத போராட்டம் காரணமாக எகிப்தின் அதிபர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் ஹோஸ்னி முபாரக்.
இதைத் தொடர்ந்து ஆட்சியை ராணுவத்திடம் ஒப்படைத்தார் முபாரக். தங்கள் போராட்டத்துக்குக் கிடைத்த மகிழ்ச்சியை அந்நாட்டு மக்கள் விடியவிடியக் கொண்டாடினார்கள்.
எகிப்து நாட்டில், கடந்த 30 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்தார் அதிபர் ஹோஸ்னி முபாரக்.அவருக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடந்தாலும், இப்போதுதான் அது உச்சகட்டத்தை அடைந்தது.
கடந்த 18 நாட்களாக, தலைநகர் கெய்ரோ மற்றும் அலெக்சாண்டிரியா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிபர் பதவியில் இருந்து முபாரக் விலகுவதற்கு கடந்த வெள்ளிக்கிழமை வரை பொது மக்கள் கெடு விதித்து இருந்தனர்.
ஆனால், வருகிற செப்டம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் வரை பதவியில் இருந்து விலக முபாரக் மறுத்துவிட்டார். நேற்று முன்தினம் பொதுமக்களுக்கு உரையாற்றிய அதிபர் முபாரக், தான் பதவி விலகப் போவதில்லை என்று திட்டவட்டமாக மறுத்தார்.
இதனால், ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற போராட்டக்காரர்கள் நேற்று லட்சக்கணக்கில் திரண்டு, அதிபர் மாளிகையையும், பாராளுமன்றத்தையும் முற்றுகையிட்டனர். நேற்று முன்தினம் இரவில் இருந்தே கெய்ரோவில் சுதந்திர சதுக்கம் அருகே மக்கள் லட்சக்கணக்கில் குவிந்தனர். மதியம் தொழுகை முடிந்ததும், சுதந்திர சதுக்கத்தில் இருந்து அதிபர் மாளிகை நோக்கி அணிவகுத்து சென்றனர். இந்த ஊர்வலத்துக்கு 'வெள்ளிக்கிழமை வழியனுப்பு விழா' (Farewell Friday) என்று பெயர் சூட்டப்பட்டது.
கெய்ரோவின் புறநகர் பகுதியில் உள்ள அதிபர் மாளிகையை சுற்றி ராணுவ டேங்குகளும், அதிபர் மாளிகை அதிரடிப்படை வீரர்களும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.
அதிபர் மாளிகையை சுற்றி சுமார் 50 மீட்டர் தூரத்தில் கம்பி தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்து. அந்த பகுதியை பொது மக்கள் சுற்றி வளைத்து கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
முபாரக்குக்கு ராணுவம் ஆதரவு:
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் இரு முறை எகிப்து ராணுவ தலைமை கவுன்சில் அவசரமாக கூடி நிலைமை குறித்து விவாதித்தது. ஏற்கனவே ஒரு தளபதி உள்ளிட்ட 16 ராணுவ அதிகாரிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்ததால், இந்த கூட்டத்தில், அதிபர் முபாரக்குக்கு எதிரான முடிவு எடுக்கப்படலாம் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், ராணுவ தலைமை கவுன்சில் கூட்டத்தில் அதிபர் முபாரக்குக்கு ஆதரவாக முடிவு எடுக்கப்பட்டது.
2-வது கூட்டம் முடிவடைந்தபின் வெளியிடப்பட்ட அறிக்கையில், முபாரக் ஏற்கனவே கூறியதுபோல் செப்டம்பர் மாதம் நியாயமாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்தப்படும் என்றும், அவசர நிலை சட்டம் ரத்து செய்யப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. அத்துடன் மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதுபோல், வீடுகளுக்கு திரும்பி வேலையை கவனியுங்கள் என்றும் உத்தரவிடப்பட்டது.
இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்தாலும், போராட்டத்தை கைவிடவில்லை. இறுதிவரை மேலும் தீவிரமாக போராடுவது என்று மக்கள் முடிவு செய்தனர்.
மக்கள் போராட்டத்தால், உயிருக்கு பயந்த முபாரக் தனது குடும்பத்தினருடன் ஹெலிகாப்டரில் பாதுகாப்பான இடத்துக்கு தப்பிச்சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், அதிபர் முபாரக் பதவி விலகியதாக, துணை அதிபர் உமர் சுலைமான் அறிவித்ததாக அரசு தொலைக்காட்சி அல்-ஜசீரா நேற்று இரவு அறிவித்தது. இதைத்தொடர்ந்து முபாரக்கின் 30 ஆண்டு சர்வாதிகார ஆட்சி நேற்று முடிவுக்கு வந்தது.
ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதாக அறிவிப்பும் வெளியானது.
மக்கள் கொண்டாட்டம்:
சுலைமானின் அறிவிப்பை கேட்ட, பொதுமக்களின் கிளர்ச்சி வெற்றி கொண்டாட்டங்களாக மாறியது. நாடு முழுவதும் பட்டாசுகள் வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய நோபல் பரிசு வென்ற எல் பராடி, இதுகுறித்து கூறுகையில், "எகிப்து மக்களுக்கு இந்த நாள் மிகச்சிறந்த ஒரு நாள். எகிப்து இப்போது விடுதலை அடைந்து விட்டது'' என்றார்.
முபாரக் தப்பி ஓட்டம்:
போராட்டம் தீவிரம் அடைந்து வந்ததை தொடர்ந்து, அதிபர் முபாரக் குடும்பத்தினருடன் எகிப்து தலைநகர் கெய்ரோ அருகில் உள்ள விமான படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் தப்பிச்சென்றார்.
அல் அரேபியா டெலிவிஷன் நிறுவனம் இந்த தகவலை ஒளிபரப்பியது. எகிப்தின் செங்கடல் பகுதியில் உள்ள ஷாரம் எல் ஷேக் கடற்கரை சுற்றுலா தலத்துக்கு அவர் வந்து இறங்கிய தகவல் உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்த தகவல் தெரிவித்தது.
டி.வி. நிலையம் முற்றுகை:
நேற்றைய போராட்டத்தின்போது கெய்ரோவில் முபாரக்கின் ஊதுகுழலாக செயல்பட்டுவரும் அரசு வானொலி மற்றும் டி.வி. நிலையங்களையும் மக்கள் முற்றுகையிட்டனர். அங்கு பணிபுரியும் சில ஊழியர்களும் பணியை புறக்கணித்து போராட்டக்காரர்களுடன் இணைந்தனர்.
நேற்று தொழுகை முடிந்ததும் முக்கிய முஸ்லிம் மத குருக்கள் சிலரும் போராட்டத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக