14 பிப்ரவரி 2011

பக்கவாதத்திற்கு மஞ்சளில் இருந்து மருந்து

உணவில் பயன்படுத்தும் மஞ்சளில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ள மருந்து ஒன்று பக்கவாதத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் ஒரு சிலவற்றை சீர் செய்வதாக கூறப்பட்டுள்ளது.

முயல்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் சாதகமான முடிவுகள் வந்துள்ளதை அடுத்து மனிதர்களிடம் சோதனை செய்ய செடார்ஸ் சினாய் மருத்துவ நிலையத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

மஞ்சளில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த மருந்தானது மூளையின் செல்களை சென்று சேர்ந்து தசை மற்றும் அசைவு பிரச்சனைகளை தீர்த்துள்ளது.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மஞ்சளில் இருந்து எடுக்கப்பட்டுள்ள பொருள் ஒன்று உதவும் என்று இந்த ஆராய்ச்சி தெரிவித்திருப்பது மிகவும் முக்கியமான ஒரு முன்னேற்றம் என்று தி ஸ்ட்ரோக் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.

பல நூறாண்டுகளாக மஞ்சள் இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவத்தின் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மஞ்சளில் காணப்படும் கர்குமின் எனப்படும் பொருள் பல்வேறு நல்ல பலன்களை கொண்டுள்ளது என்று பல ஆய்வு கூட ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.

ஆனால் இந்த கர்குமின், மூளையை கெட்ட பொருட்களிடம் இருந்து பாதுகாக்கும் செயலை தானாக செய்ய முடியாமல் உள்ளது.

இந்த நிலையில், கர்குமினை சிஎன்பி-001 என்று வேறு ஒரு வடிவத்துக்கு அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் மாற்றியுள்ளனர். இது மூளையை பாதுகாக்கும் திறனை கொண்டிருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

ஆய்வுக்கூடத்தில் முயல்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், பக்கவாதம் ஏற்பட்ட மூன்று மணி நேரத்திற்கு இந்த மருந்து வேலை செய்வது தெரிய வந்துள்ளது.

இந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்திய டாக்டர் பால் லேப்சாக், பக்கவாதம் ஏற்பட்ட பின்னர் மூளையில் உள்ள செல்களை உயிருடன் வைக்க தேவையான பல்வேறு வேலைகள் நடைபெறுவதில் இந்த மருந்து சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

இப்போது இந்த மருந்தை மனிதர்கள் மீது சோதனை செய்ய எத்தனித்து இருந்தாலும், குணப்படுத்த கூடிய மருந்து ஒன்றை உருவாக்க பல ஆண்டுகாலம் ஆகலாம்.
செய்தி நன்றி:-
BBC TAMIL

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக