டெல்லி: ஸ்பெக்ட்ரம் உரிமத்துக்கான விலையை 6 மடங்கு உயர்த்த மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் ஒப்புக் கொண்டிருப்பதையடுத்து, செல்போன் கட்டணங்கள் உயர்கின்றன.
செல்போன் கட்டணங்கள் இப்போது முன் எப்போதும் இல்லாத அளவு குறைவாக உள்ளன. சில நிறுவனங்கள் மறைமுகமாக வாடிக்கையாளர்களின் பணத்தைச் சுரண்டுவது உண்மையென்றாலும், முன்பு போல அழைக்கும் கால்கள், வரும் கால்கள் என எல்லாவற்றுக்கும் கட்டணம் வசூலிக்கும் அளவு மிகையாக இல்லை.
பிஎஸ்என்எல் இந்தியா முழுவதும் இலவச ரோமிங் தரும் அளவுக்கு வாடிக்கையாளர்களுக்கு செல்போன் சேவை மலிவாகக் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், அலைக்கற்றை உரிமத்தை மிகக் குறைந்த விலைக்கு தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்தது தொலைத் தொடர்புத் துறை. இதில் ரூ 1.76 கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டதால், இனி ஸ்பெக்ட்ரம் உரிமத்துக்கு 6 மடங்கு அதிக கட்டணம் வசூக்க பரிந்துரைத்தது தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய்.
இந்தப் பரிந்துரையை மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகமும் ஏற்றுக் கொண்டது.
இதனால் இனி உரிமம் வேண்டி விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் மட்டுமல்லாது, உரிமத்தைப் புதுப்பிக்கக் கோரியுள்ளவர்களும் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும் மத்திய அரசுக்கு.
எனவே செல்போன் கட்டணங்களை உயர்த்த பல்வேறு செல்போன் நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன.
செய்தி நன்றி:-
Thatstamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக