புதுடெல்லி: வெளிநாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்பு பணம், மீண்டும் இந்தியாவுக்குள் நுழைகிறதா என பங்கு விற்பனை வாரியமும் (செபி) ரிசர்வ் வங்கியும் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கி உள்ளன. சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்கள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேர் அடங்கிய பட்டியல் தம்மிடம் உள்ளதாகவும், விரைவில் அதை வெளியிடப் போவதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு விக்கிலீக்ஸ் இணையதளம் அறிவித்தது.
இதையடுத்து, சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்துள்ள இந்தியர்கள், மத்திய கிழக்கு நாடுகள், துபாய் உட்பட வேறு நாடுகள் வழியாக இந்தியாவுக்கு கொண்டுவர முயற்சி செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, வெளிநாட்டு முதலீடாக (எப்ஐஐ) இந்திய பங்குச் சந்தையிலோ அல்லது அன்னிய நேரடி முதலீடாகவோ இந்தியாவில் முதலீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. எனவே, பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டும் வெளிநாட்டு முதலீட்டை செபி தீவிரமாக கண்காணிக்க திட்டமிட்டுள்ளது.
இதுபோல, அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கும் ரிசர்வ் வங்கியும் பல்வேறு துறைகளில் செய்யப்படும் அந்நிய முதலீட்டை அலசி ஆராயத் தொடங்கி உள்ளன. பொதுவாக ரியல் எஸ்டேட், விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் வெளிநாட்டு முதலீடு தாராளமாக அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள வங்கிகளில் திடீரென டெபாசிட் செய்வது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், அதிகப்படியாக பணம் திரும்பப் பெறப்படுகிறதா? என்ற கேள்விக்கு ஸ்விஸ் வங்கிகள் சங்கள் இதுவரை பதில் அளிக்கவில்லை.
2012 வரை காத்திருக்க வேண்டும்:
இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்பவர்கள் மற்றும் பொருளாதார குற்றம் புரிகிறவர்களின் விவரங்களை பகிர்ந்து கொள்வதற்காக, சுவிஸ் வங்கிகளுடன் மத்திய அரசு ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ள குறிப்பிட்ட நபரின் விவரங்களை பெற முடியும்.
ஆனால் இந்த ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதியில்தான் இருதரப்பு அதிகாரிகளின் ஒப்புதலைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டில்தான் இது செயல்பாட்டுக்கு வரும். எனவே, சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ள இந்தியர் பற்றிய விவரங்களை அறிய 2012ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக