22 ஜனவரி 2011

டெல்லி கலைக் கண்காட்சியிலிருந்து எம்.எப். ஹூசேன் ஓவியங்கள் நீக்கம்


டெல்லி: டெல்லி யில் நேற்று தொடங்கிய அகில இந்திய கலைக் கண்காட்சியிலிருந்து பிரபல ஓவியர் எம்.எப். ஹூசேனின் ஓவியங்களை நீக்கி விட்டனர்.

இந்தியாவிலிருந்து வெளியேறி தற்போது வளைகுடாவில் வசித்து வருகிறார் ஹூசேன். அந்த நாட்டு குடியுரிமையையும் அவர் பெற்றுள்ளார். இந்தநிலையில், டெல்லியில் நேற்று தொடங்கிய அகில இந்திய கலைக் கண்காட்சியிலிலிருந்து ஹூசேனின் ஓவியங்களை நீக்கியுள்ளனர்.

சங் பரிவார் அமைப்புகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாம்.

இதுகுறித்து போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பில் கூறுகையில், ஹூசேனின் ஓவியங்கள் இந்தக் கண்காட்சியில் இடம் பெறாது. சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால், ஹூசேனின் ஓவியங்களை வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.

கடந்த 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் நடந்த கண்காட்சியிலும் கூட ஹூசேனின் ஓவியங்கள் வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹூசேனின் ஓவியங்களை வைக்கக் கூடாது என்று சங் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மிரட்டியதால்தான் ஹூசேனின் ஓவியங்கள் வைக்கப்படவில்லை என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக