22 ஜனவரி 2011

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரங்களில் டெல்லி முதலிடம்: 2வது இடத்தில் பெங்களூர்

டெல்லி: பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லாத மெட்ரோக்களில் டெல்லி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்திய தலைநகரில் தான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடக்கின்றன.

கடந்த ஆண்டு இந்தியாவின் 35 பெரு நகரங்களில் 3,43,749 குற்றங்கள் நடந்துள்ளன. இதில் 13. 2 சதவிகிதத்துடன் டெல்லி முதலிடத்தில் உள்ளது. மேலும், 9.4 சதவிகிதம், 9.1 சதவிகிதத்துடன் பெங்களூர் , மும்பை இரண்டாவது, மூன்றாவது இடத்தில் உள்ளன.

தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் 2009ல் இந்தியாவில் நடந்த குற்றங்கள் குறித்து அறிக்கை ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 2009-ம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 1, 696 கற்பழிப்புகள் நடந்துள்ளன. இதில் டெல்லியில் மட்டும் 404 நடந்துள்ளன. மேலும் நாட்டில் நடந்த 3 ஆயிரத்து 544 குழந்தைகள், பெண்கள் கடத்தலில் டெல்லியில் ஆயிரத்து 379 நடந்துள்ளன.

நாடு முழுவதும் நடந்த 684 வரதட்சனை கொலைகளில் 104ம், பெண்களைத் தொந்தரவு செய்த வழக்குகளில் 3, 477ல் 491 டெல்லியில் தான் நடந்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக