27 ஜனவரி 2011

ஸ்ரீநகரில் தேசியக் கொடியேற்ற துடித்த பாஜக ஒரிசாவில் தலைகீழாக ஏற்றியது!

இவர்கள் தான்   இந்திய வை காக்க பிறந்தவர்கள் ....

புவனேஸ்வர்: ஸ்ரீநகர் லால் சவுக்கில் தேசியக் கொடியை ஏற்றியே தீருவோம் என்று துடித்த, போராட்டத்தில் குதித்த, பரபரப்பை ஏற்படுத்திய பாஜக, ஒரிசாவில் நடந்த குடியரசு தின நிகழ்ச்சியின்போது தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றி தலை கவிழ்ந்துள்ளது.

ஒரிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள பாஜக தலைமையகத்தில் நேற்று பாஜகர சார்பில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அப்போது தேசியக் கொடியை ஏற்றினர். ஆனால் கொடி தலைகீழாக இருந்தது. இதைப் பார்த்த பத்திரிக்கையாளர்களும், கட்சியினரும், முன்னாள் அமைச்சரும், கட்சியின் மூத்த தலைவருமான ஹரிச்சந்திரனிடம் இதைத் தெரிவித்தனர். இதையடுத்து கொடியை அவசரமாக இறக்கி மீண்டும் சரியாக ஏற்றினர்.

இதுகுறித்து ஹரிச்சந்திரன் கூறுகையில், இந்த தவறுக்காக மிகவும் வருந்துகிறோம். மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். வேண்டும் என்றே இது நடக்கவில்லை. தவறுதலாக நடந்து விட்டது என்றார்.

இதேபோல ஆளும் பிஜு ஜனதாதள அலுவலகத்திலும், தேசியக் கொடி சரியாக ஏற்றப்படாமல், கொடி கீழே விழுந்தது. முதல்வர் நவீன் பட்நாயக் கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அப்போது கொடி சரியாக விரியாமல்அப்படியே மேலிருந்து கீழே விழுந்தது. உடனடியாக வேறு கயிறைக் கொண்டு வந்து அதில் கொடியைக் கட்டி மீண்டும் ஏற்றினார் நவீன் பட்நாயக்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக