03 நவம்பர் 2010
கல்யாணமாகி சென்றாலும் கூட பிறந்த வீட்டுடன் உள்ள உரிமை பெண்களுக்கு உண்டு-பாம்பே உயர்நீதிமன்றம்
மும்பை: கல்யாணமாகி புகுந்த வீட்டுக்குப் போனாலும் கூட பிறந்த வீட்டில் உள்ளவர்களுடன் உள்ள உறவு பெண்களுக்கு தொடர்ந்து நீடிக்கும் என்று பாம்பே உயர்நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பை அளித்துள்ளது.
இதுதொடர்பாக 1994ம் ஆண்டைய மகாராஷ்டிர அரசின் உத்தரவை பாம்பே உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.
அந்த உத்தரவில், திருமணமாகாத மகள்கள்தான், தங்களது பெற்றோர் அரசுப் பணியில்இருந்து முன்கூட்டியே ஓய்வு பெற்றால், அனுதாப அடிப்படையில் அந்தப் பணியை பெற முடியும் என கூறுகிறது.
இதை எதிர்த்து ஒருவர் பாம்பே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த நீதிபதி நிஷிதா மாத்ரே பிறப்பித்த உத்தரவில், திருமணமாகி சென்று விட்டாலும் கூட ஒரு பெண்ணுக்கு பிறந்த வீட்டில் உள்ள உரிமையும், உறவும் அற்றுப் போய் விடாது.
இந்தக் காலத்தில் போய், கல்யாணமாகி சென்று விட்டால் அத்தோடு அந்தப் பெண்ணுக்கும், பிறந்த வீட்டுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டு விடும் என்று கூறுவது விசித்திரமானது மட்டுமல்ல, அவமானகரமானதும் கூட. மகாராஷ்டிர அரசின் உத்தரவு நியாயமில்லாத ஒன்றாகும்.
கல்யாணமாகிப் போ்ய் விட்ட காரணத்தால் ஒரு பெண் எந்தக் காரணத்திற்காகவும் பிறந்த வீட்டை எதிர்பார்க்கக் கூடாது, பணே இல்லாவிட்டாலும் கூட கஷ்டப்பட்டுத்தான் ஆக வேண்டும், வறுமையில் வாட வேண்டும் என்று கூற முடியாது.
கல்யாணமானாலும் கூட பிறந்த வீட்டுடன் உள்ள தொடர்பு பெண்களுக்கு அப்படியேதான் இருக்கும், அதில் மாற்றம் ஏற்படும் என்பதை ஏற்க முடியாது என்று கூறினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக