04 நவம்பர் 2010

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு:உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் எனக் கருதவில்லை - வரலாற்றாய்வாளர் இர்ஃபான் ஹபீப்

புதுடெல்லி,நவ.4:பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒப்புக்கொள்ளும் என கருதவில்லை என பிரபல வரலாற்றாய்வாளர் இர்ஃபான் ஹபீப் தெரிவித்துள்ளார்.

ஒரு பிரிவினரின் நம்பிக்கைரீதியான சுதந்திரம் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டது என்பது உள்ளிட்ட அடிப்படையான ஏராளமான காரியங்களைக் குறித்து உச்சநீதிமன்றம் பரிசோதிக்க வேண்டும் என டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டியில் இர்ஃபான் ஹபீப் தெரிவித்துள்ளார்.

மஸ்ஜிதுக்கு அடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள ஏராளமான வரலாற்றாய்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். கோயிலை இடித்துவிட்டுத்தான் மஸ்ஜித் கட்டப்பட்டது என நம்பிக்கைக் கொண்ட அடல்பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசு ஆட்சிபுரியும் வேளையில்தான் ஆர்கியாலஜி சர்வே ஆஃப் இந்தியா அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டது.

ஏராளமான இட்டுக் கட்டப்பட்டவைகளும், நிராகரிக்கப்பட்டவையும் உட்பட்டதுதான் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அறிக்கை என்பது அவ்வறிக்கை வெளியானவுடன் புலனானது.

தூண்களை அடிப்படையாகக் கொண்ட கட்டிடம் கோயில் என இவ்வறிக்கையில் இட்டுக்கட்டப்பட்டது. அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்களைக் குறித்த விபரங்களை அறிக்கையிலிருந்து நீக்கிவிட்டனர்.

கடந்த சில காலங்களாக ஆர்கியாலஜி சர்வே ஆஃப் இந்தியா தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்தியுள்ளது. அகழ்வாராய்ச்சி என்பது இதில் சிறிய அளவாகும் என இர்ஃபான் ஹபீப் சுட்டிக்காட்டுகிறார்.

இவ்வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் நீதிபதி சுதீர் அகர்வாலின் தீர்ப்பு முற்றிலும் கற்பனைகளின் அடிப்படையிலானதாகும். பிரிட்டீஷார் இந்தியாவிற்கு வருகைதரும் வரை 1000 வருடங்களாக இந்தியாவின் சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டது, பாப்ரி மஸ்ஜித் குறித்து நிர்மாணிக்கப்பட்ட கல்வெட்டு போலியானது, பாபரின் நினைவுக் குறிப்புகளில் பாப்ரி மஸ்ஜிதை கட்டியது மீர்பாகியல்ல, ஓளரங்கசீபாகும் என்பது போன்ற தவறான விபரங்கள் அவருடைய தீர்ப்பில் அடங்கியுள்ளன.

மத்தியக்கால வாஸ்து சிற்பக் கலையைக் குறித்தும், அரசியல்-பொருளாதார வரலாற்றைக் குறித்தும் சிறிதளவு அறிவுக்கூட இல்லாமல் இந்த தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பது உறுதியாகும்.

நீதிபதியைப் போன்ற சாதாரணமனிதரான ஒருவரை ஆர்கியாலஜிஸ்டிற்கு பதிலாளாக கருதவியலாது. இவ்வாறு இர்ஃபான் ஹபீப் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக