சென்னை: மத நல்லிணக்கத்தைப் பற்றிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் கருத்து எனக்கு உடன்பாடானது தான். அதே நேரத்தில் மோடியின் கடந்தகால செயல்பாடுகளை மறந்துவிடவும் முடியாது என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று செய்தியாளர்கள், திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கேட்ட கேள்விகளும், கருணாநிதி அளித்த பதில்களும்:
கேள்வி: திருச்சி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா?
பதில்: திருச்சியில் அந்த தொகுதியில் வெற்றிபெற்று, அமைச்சராக பதவியேற்க வருகின்ற நேரத்தில் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த அந்த நண்பர் விபத்துக்கு ஆளான காரணத்தால் நடைபெறுகின்ற இடைத்தேர்தல் அது. அந்த அனுதாபத்தின் காரணமாக இந்த இடைத்தேர்தலில் திமுக போட்டியிட வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி யோசித்து முடிவு செய்யப்படும்.
கேள்வி: இதுபோன்ற இடைத்தேர்தல்களில், அந்த தொகுதிகளில் ஏற்கனவே நின்று வெற்றி பெற்ற கட்சிக்கே அந்த தொகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டுமென்று ஏற்கனவே ஒரு முறை நீங்கள் சொல்லியிருக்கிறீர்களே?
பதில்: எல்லோரும் அந்த கருத்தை ஒத்துக்கொண்டால் நாங்களும் அந்த கருத்தை ஏற்றுக்கொள்வோம்.
கேள்வி: உள்ளாட்சி மன்ற தேர்தல் வேட்பாளர்கள் எல்லாம் எப்போது அறிவிக்கப்படுவார்கள்?
பதில்: தேர்தல் தேதிக்கான அறிவிப்பு வரட்டும்.
கேள்வி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த வழக்கில் நீங்கள் விடுத்த அறிக்கையிலே "அரசியல் நோக்கத்தோடு'' என்று சொல்லியிருக்கிறீர்கள், அப்படி ஏதாவது திமுகவிற்கு எதிராக நடைபெறுவதாக சந்தேகப்படுகிறீர்களா?
பதில்: திமுகவிற்கு எதிராக நடைபெறுவதாக சந்தேகம் அல்ல. ஜாமீன் கூட கொடுக்க நீதிமன்றம் முன்வராமல் காலம் நீண்டு கொண்டே போவதைத்தான் சொல்லியிருக்கிறேன்.
கேள்வி: "டிராய்'' நிறுவனத்தின் அறிக்கையில் இழப்பு இல்லை என்று சொல்லியிருப்பதால் காலதாமதம் ஆகிறதா?
பதில்: அது வேறு விவகாரம்-இது வேறு விவகாரம். இரண்டையும் இணைத்திட முடியாது.
கேள்வி: குஜராத் முதல்வர் மோடியின் 3 நாட்கள் உண்ணாவிரதம் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: மத நல்லிணக்கத்தைப் பற்றி மோடியின் கருத்து எனக்கு உடன்பாடானது தான். அதே நேரத்தில் மோடியின் கடந்தகால செயல்பாடுகளை மறந்துவிடவும் முடியாது.
கேள்வி: பரமக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு அனைத்து கட்சியினரும் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கேட்கிறார்களே?
பதில்: அனைத்து கட்சியினரும் சொல்கிற கருத்தை நானும் ஏற்றுக்கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக