பரேலி/புதுடெல்லி:அற்பமான இழப்பீடு தேவையில்லை. எனக்கு தேவை அரசுப்பணி என ஓடிக்கொண்டிருந்த ரெயிலிருந்து செயின் பறிப்பு திருட்டுக் கும்பலால் கீழே தள்ளப்பட்ட காலை இழந்த தேசிய விளையாட்டு வீராங்கனை சோனு என்ற அருணிமா சின்ஹா தெரிவித்துள்ளார்.
“அரசு நஷ்ட ஈடாக வழங்கும் சில ஆயிரங்கள் எனது வாழ்வை கழிக்க அதிகநாட்களுக்கு உதவாது. எனது வாழ்க்கை இனியும் மீதமுள்ளது. ஆதலால் எனக்கு நிரந்தரமான வேலை தேவை. எனக்கு இழப்பீடாக ரூ.25 ஆயிரம் வழங்குவதாக விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த சிறு தொகை வாழ்நாள் முழுவதுக்கும் உதவாது. எனவே அரசுப் பணி வழங்க வேண்டும். காலை இழந்துள்ளதால் எனது கனவு சுக்கு நூறாகிவிட்டது. இனிமேல் எப்படி எனது கனவை நனவாக்க முடியும்” என மருத்துவமனையில் படுக்கையில் கிடக்கும் 23 வயதான தேசிய கால்பந்து, வாலிபால் வீராங்கனையான அருணிமா சின்ஹா வருத்தத்துடன் கூறியுள்ளார்.
அருணிமாவின் சகோதரி லட்சுமி கூறுகையில்,
“சோனு நலமுடன் உள்ளார். தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அது இரண்டு நாள்களில் தெரியவரும் என்று மருத்துவர் தெரிவித்துள்ளார். ரயிலில் செல்லும் பெண்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது” என்றார்.
மொராதாபாத் ரெயில்வே டிவிசனில் துணை மேலாளர் ஏ.கே.சிங்காலும் அருணிமா சின்ஹாவை சந்தித்தார். நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குழு இச்சம்பவம் குறித்து விசாரிக்குமெனவும், ஒருவாரத்திற்குள் அவர்கள் அறிக்கையை சமர்ப்பிப்பார்கள் எனவும் சிங்கால் தெரிவித்துள்ளார். அவசர உதவிக்கு ரூ.5000 வழங்கினார் அவர்.
அருணிமாவுக்கு இலவச மருத்துவ சேவை கிடைக்க ஏற்பாடுச் செய்யப்படுமென ரெயில்வே துறை தலைவர் விவேக் சஹாய் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். செயற்கை கால் பொருத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரெயில்வே விபத்து நஷ்ட ஈட்டிற்கான நீதிமன்றம்தான் இழப்பீடுத்தொகை குறித்து தீர்மானிக்கும் என சஹாய் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச அரசிடமிருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளதாக தேசிய மகளிர் கமிஷன் தலைவர் யாஸ்மின் அப்ரார் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தை பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளனர்.
அருணிமா சின்ஹாவின் மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். அவருக்கு ஏற்றாற்போல் ரயில்வே துறையில் வேலை வழங்கப்படும்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கவலை தெரிவித்தார். இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது என்றும், அருணிமா சிகிச்சை பெறுவதற்கு தேவையான நிதியுதவியை அளிக்குமாறும் மம்தா கூறியதாக சஹாய் தெரிவித்துள்ளார்.

நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக