திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் அச்சுதானந்தன் போட்டியிடம் மலம்புழா தொகுதியில் பா.ஜ. வேட்பாளர் நிறுத்தப்படவில்லை. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுடன் பா.ஜ. ரகசிய கூட்டு வைத்துள்ளது வெட்ட வெளிச்சமாகி உள்ளது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில், கேரளாவில் பா.ஜ. வேட்பாளர்களை ஆதரித்து சுஷ்மா சுவராஜ் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். திருவனந்தபுரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பா.ஜ. ரகசிய கூட்டணி வைத்துள்ளதாக காங்கிரஸ் கூறும் குற்றச்சாட்டு அர்த்தமற்றது. சில சமயங்களில் இதுபோன்ற செயல்கள் (மலம்புழாவில் வேட்பாளர் நிறுத்தப்படாதது) நடந்து விடுவது வாடிக்கைதான்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரச்னையில் மட்டும் இடதுசாரிகளுடன் இணைந்து நாங்கள் பிரச்னையை கிளப்பினோம்.
மற்றபடி, அவர்களுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை.
இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.
நன்றி (செய்தி ) :- தினகரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக