20 ஏப்ரல் 2011

ஜெர்மனி பேக்கரி குண்டுவெடிப்பு வழக்கு என்.ஐ.ஏவிடம் ஒப்படைப்பு

புதுடெல்லி:கடந்த ஆண்டு புனேவில் ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்புடைய வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) உடனடியாக ஏற்றுக்கொள்ளும்.

தற்போது இவ்வழக்கை விசாரித்துவரும் மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படை(ஏ.டி.எஸ்) ஒருவரை கைது செய்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது.

ஏ.டி.எஸ்ஸின் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததைத் தொடர்ந்து வழக்கை என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்க மத்திய அரசு தீர்மானித்தது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் துவங்குவதற்கு முன்பு டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதுக்கு அருகே நடந்த குண்டுவெடிப்பு, 2010 வாரணாஸி குண்டுவெடிப்பு ஆகிய வழக்குகளின் விசாரணையை என்.ஐ.ஏ ஏற்றுக்கொள்ளும். மூன்று வழக்குகளும் உடனடியாக என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்கப்படும் என உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜெர்மனி பேக்கரி குண்டுவெடிப்பை மிர்ஸா ஹிமாயத் பேக் என்பவரும், லஷ்கர்-இ-தய்யிபா மற்றும் இந்தியன் முஜாஹிதீன் ஆகிய இயக்கங்களும் நடத்தியதாக ஏ.டி.எஸ் கூறுகிறது. ஆனால், ஏ.டி.எஸ்ஸின் வாதத்தில் தெளிவில்லாததன் காரணமாக இவ்வழக்கை என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டது.

நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக