புதுடில்லி : : ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்ட மசோதாவை அமல் படுத்தக்கோரி டில்லியில் காந்தியவாதி அன்னா ஹசாரே தொடர்ந்து 3வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். டில்லியில் இன்று அவர் அளித்த பேட்டியில் : தனது அறப்போராட்டத்துக்கு திரண்டுள்ள பெரும் ஆதரவு உத்வேகத்தை அளிக்கிறது. இன்றும் நிறைய பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். நிர்வாக சீர்திருத்தம் வேண்டுமானால் , மக்கள் இந்த போராட்டத்தில் நிச்சயம் பங்கேற்க வேண்டும். அரசியல்வாதிகள் ஆண்டு ஆண்டு காலமாக நமது தேசத்தை சீர்குலைத்து உள்ளனர். எந்த ஒரு அரசியல் கட்சியும் முழுமையாக பரிசுத்தமானதாக இல்லை.என்றார் .
மேலும் அவருக்கு ஆதரவாக நேற்று டில்லி இந்தியா கேட் பகுதியில் இருந்து ஜந்தர் மந்தர் பகுதி வரைக்கும் பெருந்திரளான மாணவர்களும் , மனித உரிமைக் கழக ஆர்வலர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக