புதுடெல்லி:பிரபல மனித உரிமை ஆர்வலரும், மருத்துவருமான பினாயக் சென்னிற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதை மத்திய அமைச்சர்கள் உள்பட பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
பினாயக் சென்னிற்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
ப.சிதம்பரம் பினாயக் சென்னிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், உச்சநீதிமன்றம் பினாயக் சென்னிற்கு ஜாமீன் வழங்கியதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். கீழ் நீதிமன்ற தீர்ப்பில் திருப்தி இல்லாத சூழலில் உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்பதை நான் பல முறை கூறியுள்ளேன். கீழ்நீதிமன்ற தீர்ப்பை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவர் திருப்தியடைந்துவிட முடியாது என்றார்.
பினாயக் சென்னிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கருத்து தெரிவிக்கையில், பினாயக் சென்னிற்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டீஷ்கர் அரசின் கண்ணைத் திறக்கும் தீர்ப்பாகும் என்றார்.
டாக்டர் பினாயக் சென்னிற்காக வாதாடிய வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கூறுகையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பேச்சுரிமைக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவாதமாகும். ஜனநாயக கொள்கை காப்பாற்றப்பட்டுள்ளது என்றார்.
பினாயக் சென் எந்த சூழலிலும் வன்முறையில் ஈடுபட்டதில்லை. வன்முறையில் ஈடுபடுவோருக்கு உதவியதுமில்லை. ஆட்சேபகரமான துண்டு பிரசுரங்கள் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டதால் மட்டும் அவர் மாவோயிஸ்ட் என்று கூற முடியாது. இதுபோல் துண்டுபிரசுரங்கள் எல்லோரது வீட்டிலும் இருக்கலாம். பினாயக்சென் வீட்டில் கைப்பற்றியதைவிட அதிகமான ஆட்சேபகரமான துண்டுபிரசுரங்கள் எனது வீட்டிலும் உள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.
மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் வசித்துவரும் சென்னின் 84 வயது தாயார் அனுசுயா கூறுகையில், வாய்மையே வெல்லும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. நீதிமன்றத்தின் மீது நான் வைத்துள்ள நம்பிக்கை உறுதிப்பட்டுள்ளது. வங்காளத்தின் புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தீர்ப்பும் வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. எனது மகன் காந்தியவாதி. வன்முறையில் அவர் எப்போதும் நம்பிக்கை வைத்தது இல்லை என்றார்.
சென்னின் மனைவி இலினா கூறுகையில், காந்தி பற்றிய கருத்துக்கள் அடங்கிய நூல்களை ஒருவர் வைத்திருந்தால் மட்டும் அவர் காந்தியாகிவிட முடியாது என்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஒருவர் கூறியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை கேட்ட பிறகுதான் சாதாரண நிலைக்கு நான் வந்துவிட்டேன். விசாரணை நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு துரதிருஷ்டவசமானது. நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டேன் என நான் கூற மாட்டேன் என்றார்.
சத்தீஷ்கர் முதல்வர் ரமண்சிங் கூறுகையில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எனது அரசு மதிப்பளிக்கிறது. உச்ச நீதிமன்றம் இப்போது ஜாமீன் மட்டுமே அளித்துள்ளது. அவர் மீதான விசாரணை பிலாஸ்பூரிலுள்ள உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெறும். இறுதித் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அதை மதித்து ஏற்போம் என்றார்.
பினாயக் சென் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சத்தீஷ்கர் அரசு வாபஸ் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி.ராஜா கோரிக்கை விடுத்தார்.

நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக