கெய்ரோ : எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் மற்றும் அவரது இரு மகன்களும், எகிப்து ராணுவ அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகார துஷ்பிரயோகம் மற்றும் எகிப்து எழுச்சி நடந்த போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வன்முறையை ஏவி விட்டது குறித்து, அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்தாண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், எகிப்தில் முபாரக் கிற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட் டத்தில் முபாரக்கின் ஆதரவாளர்கள் மற்றும் போலீசார், மக்கள் மீது நடத்திய பல்வேறு தாக்குதல்களில் 800 பேர் பலியாயினர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.
கடந்த பிப்ரவரி 11ம் தேதி, முபாரக் பதவி விலகி, சினாய் தீபகற்பத்தில் உள்ள ஷரம் எல் ஷேக்கில் உள்ள தனது மாளிகைக்குச் சென்று விட்டார். எனினும் அவர் மீது ராணுவ அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த வார இறுதியில், தாரிர் சதுக்கத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், முபாரக் மற்றும் அவரது மகன்களையும் கைது செய்து விசாரிக்க வேண்டும், மக்களிடம் இருந்து அவர் கொள்ளையடித்த பணத்தை மக்களுக்கே திருப்பி அளிக்க வேண்டும் என்று கோரி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஷரம் எல் ஷேக்கில் உள்ள முபாரக் மற்றும் அவரது இருமகன்கள் ஆலா மற்றும் கமால் ஆகியோரை நேற்று எகிப்து ராணுவ அரசு கைது செய்ததாக, தெரிவிக்கப்பட்டது. முபாரக்கிடம் விசாரணை நடந்த சில மணி நேரங்களில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முபாரக் மற்றும் அவரது இரு மகன்களும் 15 நாள் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆலா மற்றும் கமால் இருவரும் தற்போது கெய்ரோவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 10ம் தேதி, அல் அரபியா "டிவி'யில் பேசிய முபாரக், தன் ஆட்சிக் காலத்தில் அதிகார துஷ்பிரயோகமோ, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வன்முறை ஏவலோ நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்திருந்தார்.
முபாரக்கின் இளைய மகன் கமால் தான், முபாரக்கிற்கு அடுத்த அதிபராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை இருவரும் முதலிலேயே மறுத்து விட்டனர். எகிப்தில் தனியார் மயமாக்கம் மற்றும் அன்னிய நேரடி முதலீடுகள் அதிகரிப்புக்கு கமால் வகுத்தளித்த திட்டம்தான் காரணம் என்று கூறப்படுகிறது.
நன்றி (செய்தி ) :- தினகரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக