06 ஏப்ரல் 2011

காங்கோவில் ஐ.நா. விமானம் விபத்து 32 பேர் பரிதாப பலி

கின்ஷாசா & ஐ.நா. அமைப்புக்கு சொந்தமான பயணிகள் விமானம் காங்கோ நாட்டில் விபத்துக்குள்ளானதில் 32 பேர் பலியாயினர்.
காங்கோவில் ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் 19 ஆயிரம் பேர் உள்ளனர். உள்நாட்டு போராட்டக்காரர்களிடமிருந்து பொதுமக்களை காக்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் காங்கோவின் கிசாங்கனி என்ற நகரிலிருந்து கின்ஷாசா என்ற நகருக்கு ஐ.நா. அமைப்பின் சி.ஆர்.ஜே&100 ரக விமானம் நேற்று புறப்பட்டது. அதில் ஐ.நா. அமைதிப் பணியாளர்கள் உட்பட 33 பேர் பயணம் செய்தனர். கின்ஷாசா விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றபோது, பலத்த காற்று வீசியதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது. இதில் 32 பேர் பலியாயினர். ஒரே ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக