20 ஏப்ரல் 2011

மேலும் 25 புள்ளிகள் வட்டியை உயர்த்தியது ஸ்டேட் பேங்க்!

மும்பை: பல்வேறு கடன்களுக்கான வட்டி வீதங்களை மீண்டும் உயர்த்தி அதிர்ச்சி தந்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி.

கடன்களுக்கான அடிப்படை வட்டியை வங்கிகள் விருப்பப்படி உயர்த்தலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்ததைத் தொடர்ந்து, மீண்டும் மீண்டும் வட்டி வீத உயர்வை அறிவித்து வருகின்றன இந்திய வங்கிகள்.

அதன்படி, இதுவரை 13 சதவீதமாக இருந்த முதன்மை வட்டி வீதம் இனி 13.25 சதவீதமாக உயர்ந்துள்ளது.

வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டியும் 25 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ 30 லட்சம் வரை 10 சதவீதம் விதிக்கப்பட்டு வந்த வட்டி, இனி 10.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ 30 லட்சத்துக்கும் அதிகமான கடன் தொகைக்கு சிறப்பு வட்டி வீதமாக முதல் ஆண்டுக்கு 9 சதவீதமும், இரண்டாம் ஆண்டுக்கு 9.75 சதவீதமும், மூன்றாம் ஆண்டுக்கு 10 சதவீதமும் வசூலிக்கப்படும்.

இது புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல, ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பீஐ வட்டி உயர்வை அறிவித்துள்ளதால், அடுத்து மேலும் சில வங்கிகளும் இந்த
உயர்வை அறிவிக்கவிருக்கின்றன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக