மாஸ்கோ:லிபியாவுக்கெதிரான ஐ.நா தீர்மானம் மத்தியக் காலக்கட்டத்தின் சிலுவை யுத்தமென தெரிவித்த தனது அறிக்கைத் தொடர்பான சர்ச்சைகள் முடிந்துவிட்டதாக ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கைத் தொடர்பாக அதிபருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தி சரியில்லை. அதிபர் திமித்ரி மெத்வதேவுடன் இவ்விஷயத்தில் கருத்து வேறுபாடு இல்லை என புடின் தெரிவித்தார்.
லிபியாவின் மீதான தாக்குதல் மத்தியக் காலக்கட்ட சிலுவை யுத்தம் என புடின் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக ரஷ்ய அதிபர் மெத்வதேவ் கருத்துத் தெரிவித்தது விவாதத்தை கிளப்பியிருந்தது.
நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையில் பிரதமருக்கும், அதிபருக்குமிடையே பிரிவினை ஏற்படவில்லை என ஸ்லோவேனியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள புடின் தெரிவித்தார்.
லிபியாவுக்கெதிராக எவ்வித நடவடிக்கைக்கும் அனுமதி வழங்கும் ஐ.நாவின் தீர்மானம் ஊனமான, குறைபாடுடையது என கருத்துத் தெரிவித்திருந்தார்.
லிபியாவுக்கெதிராக ஐ.நாவில் நடந்த வாக்கெடுப்பில் ரஷ்யா கலந்துக் கொள்ளவில்லை. ஆனால், லிபியாவுக்கெதிரான நடவடிக்கையை சிலுவை யுத்தமென வர்ணித்த புடினின் அறிக்கை ரஷ்ய அதிபரை கோபங்கொள்ளச் செய்தது. இத்தகைய அறிக்கைகள் கலாச்சாரங்களிடையே மோதலை உருவாக்குமென மெத்வதேவ் தெரிவித்திருந்தார்.

நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக