திரிபோலி:அமெரிக்காவின் தலைமையில் லிபியாவின் மீது நடத்தப்படும் விமானத் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டுமென உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
சீனா, ரஷ்யா, இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் லிபியாவின் மீதான தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளன.
லிபியாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை பிரகடனப்படுத்த சீனாவும், ரஷ்யாவும் கோரிக்கை விடுத்துள்ளன.
கூட்டணி நாடுகளின் தாக்குதலில் லிபியாவில் சாதாரண மக்கள் கொல்லப்படுவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆதலால், தாக்குதலை உடனடியாக நிறுத்துவதற்கான முடிந்தளவு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜியாங் யூ தெரிவித்துள்ளார்.
லிபியாவின் மீதான தாக்குதலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அனட்டோலி ஸெர்ட்ர்யூகோவ் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோவில் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ராபர்ட் கேட்ஸுடன் நடத்திய ரகசிய சந்திப்பில் ரஷ்ய அமைச்சர் போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட வலியுறுத்தினார்.
லிபியாவில் அந்நிய நாட்டு ராணுவத்தினர் தலையிடுவதற்கு அனுமதி வழங்கும் ஐ.நாவின் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளாமல் சீனா, இந்தியா, ரஷ்யா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் புறக்கணித்தன.
லிபியாவின் மீது நடத்தப்படும் தாக்குதலில் பங்கேற்கமாட்டோம் என துருக்கி அறிவித்துள்ளது.
இதற்கிடையே, லிபியாவின் ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபியின் தலைமையகத்தின் மீது நேற்று மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடந்தது. தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக கத்தாஃபியின் வசிப்பிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
லிபியாவின் மீது நடத்தப்படும் தாக்குதல் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என அமெரிக்க காங்கிரஸில் குடியரசுக் கட்சியின் உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.
லிபியாவின் மீது தாக்குதல் நடத்த காங்கிரஸின் அனுமதி பெறுவதில் அந்நாட்டு அதிபர் ஒபாமா தோல்வியை தழுவியிருந்தார். அமெரிக்காவின் ராணுவம் மன்னரின் ராணுவம் அல்ல. அமெரிக்க ராணுவத்தை லிபியாவுக்கு அனுப்புவதற்கான தீர்மானம் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என குடியரசுக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
லிபியாவில் கத்தாஃபியின் ராணுவத்திற்கும், எதிர்ப்பாளர்களுக்குமிடையேயான போராட்டம் தொடர்கிறது. மோதலில் நேற்று 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே எதிர்ப்பாளர்கள் வலுவாக உள்ள மிஸ்ரத்தாவில் கத்தாஃபியின் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் 4 குழந்தைகள் கொல்லப்பட்டனர். லிபியாவின் ஆட்சி மாற்றத்தை வெளிநாட்டு சக்திகள் தீர்மானிக்கக் கூடாது என இந்தியா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் தலைமையில் மேற்கத்திய சக்திகள் லிபியாவில் நடத்திவரும் விமானத் தாக்குதலை கண்டித்த இந்திய பாராளுமன்ற மக்களவை ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென வலுவான கோரிக்கை எழுந்ததை அடுத்து அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியது.
வெளிநாட்டு சக்திகள் லிபியாவில் தலையிடக் கூடாது. லிபியாவில் நடக்கும் சம்பவங்கள் அந்நாட்டின் உள்நாட்டுப் பிரச்சனையாகும். ஒரு நாட்டின் ஆட்சி மாற்றத்தை தீர்மானிக்க வேண்டியது வெளிநாடுகளல்ல. அந்நாட்டின் மக்கள்தாம் தீர்மானிக்க வேண்டுமென இந்தியாவின் நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக