டெல்லி: ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏர் இந்தியா விமானிகள் இன்று (புதன்கிழமை) ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில், அதற்கு தடை விதிக்கக்கோரி, ஏர் இந்தியா நிர்வாகம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதி கீதா மிட்டல், விமானிகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட தடை விதித்தார்.
மேலும், சமரச பேச்சுவார்த்தை முடிவடையும் வரை, வேலை நிறுத்தத்தில் ஈடுபட மாட்டோம் என்று கோர்ட்டில் ஏற்கனவே அளித்த வாக்குறுதியை பின்பற்றுமாறு விமானிகள் சங்கத்துக்கு அவர் உத்தரவிட்டார்.
அடுத்தகட்ட விசாரணை, ஆகஸ்டு 11-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக