07 மார்ச் 2011

இந்தியாவுக்குள் அல்-காய்தா பணம்: விக்கிலீக்ஸ் தகவல்

புது தில்லி, மார்ச் 6: அல்-காய்தா பயங்கரவாத அமைப்பு இந்தியாவுக்குள் பணத்தை புழக்கத்தில் விடுவதாக விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடுகள் வழியாக அல்-காய்தா பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் பணத்தை கொண்டு வருகின்றனர். மாதத்துக்கு ஒரு தடவையாவது அவர்கள் பண பரிவர்த்தனையில் ஈடுபடுகின்றனர். இது பெரு நாட்டு நிதி புலனாய்வு அமைப்பு நடத்திய ரகசிய விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

அல்-காய்தா இந்தியாவுக்குள் பணத்தை எப்படி கொண்டு சேர்க்கிறது என்பது குறித்த தகவல்களை அமெரிக்க நிதி புலனாய்வு அமைப்புடன்
பெரு நாட்டு நிதி புலனாய்வு அமைப்பு பகிர்ந்து கொண்டுள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது.

செய்தி :-தினமணி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக