பெர்லின்: ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தால் அணு உலைகள் வெடித்து, கதிர்வீச்சு பரவியது. இதனால், அந்த நாடே நிலைகுலைந்து போய்விட்டது. இது போன்ற இயற்கை பேரழிவில் இருந்து மக்களை காக்க வேண்டும் என்றால், ஜெர்மனியில் உள்ள அணு மின் நிலையங்களை உடனே மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நான்கு பெரிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஜெர்மனியில் பெர்லின், ஹாம்பர்க், கோலாக்னி மற்றும் மூனிச் ஆகிய நான்கு பெரிய நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் நேற்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஜப்பானில் கடந்த 11ம் தேதி ஏற்பட்ட பயங்கர பூகம்பம் மற்றும் சுனாமியால் பியூகுஷிமா டைச்சி அணு உலைகள் வெடித்தன. இதனால் ஏற்பட்டுள்ள கதிர்வீச்சால் மனித இனத்துக்கே பேரழிவு அச்சுறுத்தல் எழுந்துள்ளது.
இதுபோன்ற பேரழிவை நாமும் சந்திக்க வேண்டுமா? எனவே ஜெர்மனியில் உள்ள 17 அணு மின் நிலையங்களை உடனடியாக மூட வேண்டும். மின்சாரம் தயாரிப்பதற்கு மாற்று உத்திகளை கையாள வேண்டும் என்ற கோரிக்கையை லட்சக்கணக்கான மக்கள் வலியுறுத்தினர். கருத்து கணிப்பில் அணு உலைகளை மூட வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நன்றி (செய்தி ) :- தினகரன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக