புதுடெல்லி:பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காக ஹாட்லைன் வசதி உள்பட இரு நாடுகளூக்கிடையே ஐக்கியத்திற்கு வழிகோலும் முக்கிய தீர்மானங்களுடன் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் உள்துறை செயலாளர்கள் மட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்தது.
தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்ள இருநாட்டு உள்துறைச் செயலர்களுக்கு இடையே ஹாட்லைன் தொலைபேசி வசதி உடனடியாக நடைமுறைக்கு வரும்.
மும்பை தாக்குதலைக் குறித்து விசாரிக்கும் ஜூடிஸியல் கமிஷன் பாகிஸ்தானிற்கு சென்று ஆதாரங்களை சேகரிக்கலாம். மும்பைத் தாக்குதலைக் குறித்து விசாரிக்கும் பாகிஸ்தான் ஜூடிஸியல் கமிஷன் மே மாதம் 15-ஆம் தேதிக்குள் இந்தியாவிற்கு வருகை தரும். ஹிந்து பயங்கரவாதிகள் நடத்திய சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புத் தொடர்பாக இந்தியாவுக்கு கிடைக்கும் விபரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிறகு பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்படும்.
தண்டனைக் காலம் முடிந்த கைதிகள்,மீனவர்களை ஏப்ரல் 15-க்குள் விடுவிக்கவும் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்டது.
இந்திய சிறையில் இருக்கும் பாகிஸ்தானியர் குறித்தும், பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்தியர் குறித்தும் ஜூலை 1-க்குள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அளிக்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசா சட்ட நடைமுறைகளை எளிதாக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. விசா சட்டங்களில் சீர்திருத்தம் கொண்டுவர ஒருங்கிணந்த குழு அமைக்கப்படும். இக்குழு விசா சட்ட நடைமுறையில் தளர்வு செய்வதுக் குறித்து தீர்மானிக்கும்.
மருத்துவர்கள், மூத்த குடிமக்கள், பத்திரிகையாளர்கள், வர்த்தகர்கள் ஆகியோருக்கு விசா சட்டத்தில் தளர்வு அளிக்கப்படும்.
மும்பைத்தாக்குதல் குறித்து இந்திய புலனாய்வு ஏஜன்சியான என்.ஐ.ஏவும், பாகிஸ்தான் புலனாய்வு ஏஜன்சியான ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜன்சியும் பரஸ்பரம் தகவலக்ளை பரிமாறிக் கொள்ளும். இரு ஏஜன்சிகளும் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். தொழில்நுட்ப விபரங்களை பரிமாறுவதுக் குறித்து சி.பி.ஐயும், எஃப்.ஐ.ஏவும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
போதைப்பொருள் கடத்தலை தடுக்க இந்தியாவில் நர்கோடிக் பீரோவும், பாகிஸ்தானில் எ.என்.எஃபும் ஐக்கியமாக செயல்படுவார்கள். இந்தியாவின் நர்கோடிக் பீரோ இயக்குநர் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மே மாதம் பாகிஸ்தான் செல்வார்.
உள்துறை செயலாளர்கள் மட்ட பேச்சுவார்த்தை ஆறு மாதத்திற்கொருமுறை நடத்துவதற்கும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இருநாடுகளின் செயலாளர்கள் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
இரு நாடுகளுக்கிடையேயான உறவில் கீறலை ஏற்படுத்திய மும்பைத் தாக்குதலில் இந்திய புலனாய்வுக் குழுவினர் பாகிஸ்தானுக்கு சென்று ஆதாரங்களை சேகரிக்கலாம் என்பது முக்கிய தீர்மானமாகும். மும்பை தீவிரவாத தாக்குதலைக் குறித்து விசாரித்துவரும் பாகிஸ்தான் ஜூடிஸியல் கமிஷன் இந்தியாவிற்கு வருகைத் தந்து ஆதாரங்களை சேகரிக்கலாம் என்பதை இந்தியா முன்னரே அனுமதி வழங்கியிருந்தது.
கடந்த 2007-ஆம் ஆண்டு டெல்லியிலிருந்து லாகூருக்குச் சென்ற சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஹிந்து பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் 68 பேர் மரணமடைந்தனர். இதில் பெரும்பாலோர் பாகிஸ்தானைச் சார்ந்தவர்களாவர். ஆனால், குண்டுவெடிப்பில் பாகிஸ்தானுக்கு தொடர்புள்ளது என துவக்கத்தில் இந்திய புலனாய்வு ஏஜன்சிகள் தெரிவித்தன. தொடர் விசாரணையில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்தியதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இவற்றை இந்தியா பாகிஸ்தானிடம் ஒப்படைக்கும்.
2008 நவம்பர் 26-ஆம் தேதி மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு முறிந்துபோன இரு நாடுகளுக்கிடையேயான உறவை மீண்டும் இணைப்பதற்கான முக்கிய தீர்மானங்கள் பேச்சுவார்த்தையின் போது நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக