நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக டெல்லியில் தூதராக நியமிக்கப்பட்டதை நினைவுகூறிய ஐக்கிய நாடுகள் தலைவர் பான் கி மூன், தாம் ராஜதந்திரத்தைக் கற்றுக் கொண்டது இந்தியாவில் தான் என்றார். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் பிரபல வயலின் கலைஞர் எல்.சுப்பிரமணியத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன், "ராஜந்திரத்தைக் கற்றுக் கொண்டதும், இந்திய இசையை ரசித்ததும் டெல்லியில் தான்," என்றார்.ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் ஆவதற்கு முன்பாக தென் கொரியாவின் தூதராக பதவி வகித்த பான் கி மூன், டெல்லியில் தென் கொரிய தூதராக பொறுப்பேற்று தனது வெளியுறவுப் பணியைத் தொடங்கினார்.
தற்போது, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுப்பதற்கு போட்டியிட முடிவு செய்துள்ள பான் கி மூனுக்கு இந்தியா தனது ஆதரவை குறிப்பால் தெரிவித்திருப்பது கவனத்துக்குரியது.
செய்தி :- ஆசியநண்பன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக