பேராசிரியர் முகமது யூனஸ்
பங்களாதேஷை சேர்ந்த நோபல் பரிசு வென்றவரான பேராசிரியர் முகமது யூனஸ் அவர்கள் கிராமின் வங்கியின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அந்நாட்டின் நிதித்துறை கண்காணிப்பாளர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். கிராமின் வங்கியை முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தோற்றுவித்தவரே பேராசிரியர் முகமது யூனஸ் அவர்கள் தான்.
பேராசிரியர் முகமது யூனஸ் அவர்கள் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் திரும்பவும் நிர்வாக இயக்குநராக பணியமர்த்தப்பட்ட போது, பங்களாதேஷ் வங்கியிடம் ஒப்புதல் பெறவில்லை என கிராமின் வங்கியின் தலைவரான முசாமல் ஹக் பிபிசியிடம் தெரிவித்தார்.
பேராசிரியர் முகமது யூனஸ் அவர்களின் பதவி நீக்கம் உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும், இது தொடர்பாக அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டு விட்டதாகவும் முசாமல் ஹக் மேலும் தெரிவித்தார்.
அதே போன்று ஓய்வு பெற வேண்டிய வயதான 60 ஐ தாண்டியும், பேராசிரியர் முகமது யூனஸ் அவர்கள் பதவியில் நீடித்ததன் மூலம் வங்கதேசத்தின் ஓய்வூதிய சட்டங்களை மீறி விட்டார் என்றும் பங்களாதேஷ் வங்கி தெரிவித்துள்ளது. பேராசிரியர் முகமது யூனஸ் அவர்களின் வயது 70.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பேராசிரியர் முகமது யூனஸ் அவர்களால் நிறுவப்பட்ட கிராமின் வங்கி சமூகத்தில் வறியவர்களாக இருப்பவர்களுக்கு சிறு கடன்களை கொடுத்து வந்தது. கிராமின் வங்கியின் இந்த முன்னோடி திட்டம் உலகம் முழுவதும் பின்னர் மற்றவர்களால் பின்பற்றப்பட்டது.
இந்த வங்கியின் 75 சதவீத பங்குகள் இந்த வங்கியில் கடன் வாங்கியவர்கள் மற்றும் சேமிப்பு வைத்திருப்பவர்களிடம் இருக்கிறது. மீதமுள்ள 25 சதவீதம் அரசாங்கத்திடம் உள்ளது.
பேராசிரியர் முகமது யூனஸ் அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டது, அவருக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் இடையில் இருக்கும் மோதலின் முடிவாக இருக்கும் என செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2007 ஆம் ஆண்டு பேராசிரியர் முகமது யூனஸ் அவர்கள் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க முற்பட்டது முதல் அவருக்கும் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் இடையில் மோதல் ஆரம்பித்தது.
டிசம்பர் மாதம் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா வெளியிட்டு இருந்த அறிக்கையில், கிராமின் வங்கியை தன்னுடைய சொந்த சொத்து போல பேராசிரியர் யூனஸ் நடத்துவதாகவும், வறியவர்களிடம் ரத்தத்தை உறிஞ்சுவதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார்.
தற்போது பேராசிரியர் முகமது யூனஸ் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது சர்வதேச சமூகத்திடம் வரவேற்பை பெற்று கொடுக்காது என செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
அயர்லாந்தின் முன்னாள் அதிபர் மேரி ராபின்சன் அவர்கள் தலைமையிலான தொண்டு நிறுவனங்கள் கடந்த மாதம் வெளியிட்டு இருந்த அறிக்கை ஒன்றில், அரசாங்கம் நியாயமற்ற வகையில் அவர் தொடர்பான தப்பான தகவலை பரப்பி வருவதாக குற்றம் சுமத்தியிருந்தன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக