ஐப்பானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஃபுக்குஷிமா அணு மின்நிலையத்தின் குளிரூட்டல் கட்டமைப்புக்கான மின் விநியோக முயற்சி வெற்றியளித்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சனிக் கிழமைக்குள் ஃபுக்குஷிமா மின் நிலையத்தின் ஆறு உலைகளில் நான்கு உலைகளுக்கான மின் கம்பிகளை பொருத்தி முடிக்க முடியுமென பணியாளர்கள் நம்புகின்றனர்.
நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக இந்த மின் நிலையத்தின் அணு உலைகளை குளிரேற்றும் கட்டமைப்பு செயலிழந்து போனதையடுத்து, உலைகளையும் அங்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எரிகுச்சிகளை சேமிக்கும் தொட்டியையும் குளிர்மைப் படுத்துவதற்காக கடல் நீரைப் பாய்ச்சும் முயற்சிகளில் பணியாளர்கள் கடந்த ஒரு வாரமாக கடுமையாகப் போராடி வருகின்றனர்.
கடல்நீரை ஹெலிகொப்டர்களில் அள்ளிவந்து கொட்டும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
ஃபுக்குஷிமா நிலைமை சற்று எச்சரிக்கைக்குரியது என்ற போதிலும் கடந்த 24 மணிநேரத்தில் எவ்வித பாதகமான நிலைமையும் ஏற்படவில்லையென ஐநாவின் அணு தொடர்பான கண்காணிப்பு நிறுவனமான ஐஏஈஏ கூறுகின்றது.
மின் நிலையத்தின் இரண்டு உலைகளுக்கான மின் தொடர்பு இப்போது சீர்செய்யப்பட்டு விட்டதாக ஐப்பானின் அணு மற்றும் கைத்தொழில் பாதுகாப்பு நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
உணவுகளில் கதிரியக்கத் தாக்கம்
இதேவேளை, பால் மற்றும் பசளிக் கீரைகளில் கதிரியக்க கலப்பு ஏற்பட்டுள்ளதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து ஃபுக்குஷிமா நிர்வாக எல்லைக்குள் உணவுப் பொருட்களை விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களில் ஏற்பட்டுள்ள இந்த கதிரியக்க கலப்பை ஜப்பானிய அதிகாரிகள் உறுதிசெய்துள்ளதுடன், இந்த கதிரியக்கத்தின் அளவு மனிதர்களின் உடல்நலத்தைப் பாதிக்ககூடியது என குறிப்பிட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தால் ஜப்பான் அணு தொடர்பான நெருக்கடி நிலையை எதிர்கொண்டது முதல் உணவில் கதிரியக்கம் கலந்திருப்பதாக முதற் தடவையாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.
இதேவேளை ஜப்பானின் பல ஆசிய வர்த்தகம் வைத்திருக்கும் சீனா, தாய்வான், தென்கொரியா, தாய்லாந்து மற்றும் ஹொங்கொங் உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் இப்போது ஜப்பானிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களில் கதிரியக்க கலப்பேதும் இருந்துவிடலாம் என்ற அச்சத்தில் மிகுந்த விழிப்புடன் இருக்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக