டோக்கியோ:பூகம்பத்தைத் தொடர்ந்து வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்த புகுஷிமா டெய்ச்சி அணுமின் நிலையத்திலிருந்து மீட்புபணியாளர்கள் முழுவதுமாக வாபஸ் பெறப்பட்டனர்.
நேற்று மீண்டும் ஒரு அணு உலையில் தீப்பிடித்ததைத் தொடர்ந்து அணுக்கதிர்கள் வெளியேறுவது அதிகரித்ததைத் தொடர்ந்து அணுசக்தி நிலையத்தில் அணு உலைகளை குளிரூட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் வாபஸ் பெறப்பட்டதாக ஜப்பான் முதன்மை கேபினட் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் நான்காவது அணு உலையில் தீப்பிடித்ததைத் தொடர்ந்து அணுக்கதிர்களின் தாக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் போரி ஆசிட் தெளிக்கப்பட்டது. அணுசக்தி உலைகளில் வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அணுமின் நிலையத்திலிருந்து 730 பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். அணுசக்தி நிலையத்தின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அணுசக்தி நிலையத்தின் 20 கி.மீ சுற்றளவிற்கு வசித்த மக்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பூகம்பமும்,சுனாமியும் அதனைத் தொடர்ந்து அணு உலை வெடிப்பால் அணுக்கதிர்கள் வெளியேறுவதும் நாட்டை துயரத்தில் ஆழ்த்தியது தன்னை கவலைக் கொள்ளச் செய்வதாக 77 வயதான மன்னர் அகிஹிடோ தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரைநிகழ்த்தினார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியில் 11 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காணவில்லை. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஜப்பான் சந்தித்த மிகப்பெரிய பேரிடர் இது என நேற்று முன் தினம் நாட்டு மக்களுக்கு உரைநிகழ்த்திய ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக