23 மார்ச் 2011

5 வயதில் கோடீஸ்வரன் U.A.E சிறுவன் சாதனை

அபுதாபி: ஐக்கிய அரபு குடியரசில் தேசிய சேமிப்பு பத்திரத்தில் சேமித்த 5 வயது சிறுவன் ஒருவன் கோடீஸ்வரனாகி உள்ளான். இதன்மூலம் அவனுக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு குடியரசில் வெளிநாட்டவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வசித்து வருகிறார் ஷேக். இவர், தனது மகன் இப்ராகிம் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேசிய சேமிப்பு பத்திரத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார். இதன்மூலம், 5 வயதிலேயே கோடீஸ்வரனாகி உள்ள இப்ராகிமுக்கு தேசிய சேமிப்பு பத்திர நிறுவனம் பரிசுப் பொருட்களை வழங்கி கவுரவித்துள்ளது.

ÔÔஎன்னை கோடீஸ்வரனாக்கிய தேசிய சேமிப்பு பத்திர நிறுவனத்துக்கு நன்றி. இந்த பணத்தைக் கொண்டு சாக்லெட் வாங்க விரும்புகிறேன். என் அப்பாவைப் போல நானும் சேமித்து எனது குடும்பத்துக்காக பொம்மைகள் மற்றும் பரிசுப் பொருட்களை வாங்குவேன் என இப்ராகிம் மழலை மொழியில் கூறியுள்ளான். தேசிய சேமிப்பு பத்திரத்தில் இதுவரை 6.1 லட்சம் பேர் முதலீடு செய்துள்ளனர். இவர்களில் 63 சதவீதம் பேர் வெளிநாட்டவர்கள். இதில் சேமிக்கும் வெளிநாட்டவர்களை ஊக்குவிக்கும் வகையில், இதுவரை ரூ.203 கோடியை பரிசாக இந்நிறுவனம் வழங்கி உள்ளது.

எதிர்கால வாழ்க்கைக்கு சேமிப்பு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்ற எண்ணத்தை மக்களிடையே உருவாக்கி உள்ளோம். குறிப்பாக குழந்தைகள் பணத்தின் அருமை பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறது. எங்கள் வாடிக்கையாளர்களில் 13 சதவீதம் பேர் குழந்தைகள். இது ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறதுÕÕ என தேசிய சேமிப்பு பத்திர நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி முகம்மது காசிம் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் வசிப்பவர்கள் அனைவருமே எதிர்காலத்தில் பொருளாதார சிக்கலின்றி வாழ்வதற்காக முறையாக திட்டமிடுகின்றனர். அதிக வருமானம் தரக்கூடிய இனங்களில் முதலீடு செய்கின்றனர். தங்களுடைய குழந்தைகளிடமும் இந்த பழக்கத்தை கற்றுக் கொடுத்துவிடுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக