சென்னை: காதலர் தினத்தன்று அனைத்து குரல் அழைப்புகளுக்கும், எஸ்எம்.எஸ்.களுக்கும் கட்டணச் சலுகைகளை ரத்து செய்வதாக பிஎஸ்என்எல் இன்று அறிவித்துள்ளது.
வரும் 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தை ‘பிளாக் அவுட்‘ தினமாக அறிவித்து அன்று குரல் அழைப்புகளுக்கும், எஸ்.எம்.எஸ்-க்கும் அனைத்துவிதமான கட்டணச் சலுகைகளும் ரத்து செய்து பிஎஸ்என்எல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது ப்ரீ-பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு திட்டங்களுக்கும் பொருந்தும். மேலும், இது தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம் மற்றும் சென்னை தொலைபேசி பகுதிகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
வரும் 14-ம் தேதி மட்டும் குரல் அழைப்புகள், குறுந்தகவல்கள் அதன் பிரதான திட்டங்களின் அடிப்படையில் தான் இருக்கும். மேலும், அன்று பூஸ்டர்கள் மற்றும் சிறப்பு கட்டண வவுச்சர்களின் சலுகை கட்டணங்களும் கிடைக்காது.
ஃபிரண்டஸ் அண்ட் ஃபேமிலி சலுகைத் திட்டம் மற்றும் ஆஃப் பீக் நேரங்களில் அனைத்துத் திட்டங்களிலும் குறைவான கட்டணச் சலுகைகள் ரத்து செய்யப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக