03 பிப்ரவரி 2011

முபாரக்கின் பேச்சு ஏமாற்றுவேலை - உடனடியாக பதவி விலக எல்பராதி வலியுறுத்தல்

கெய்ரோ,பிப்.2:சர்வதேச அணுமின் முகமையின் முன்னாள் தலைவரும், நோபல் பரிசு பெற்றவருமான எல்பராதி சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் முபாரக் உடனடியாக பதவி விலகவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
"முபாரக் செப்டம்பர் மாதம் பதவி விலகுகிறேன் எனக் கூறுவது ஆட்சியில் தொடர்வதற்கான தந்திரமாகும். முபாரக் உடனடியாக பதவி விலகி அடுத்த தேர்தல் வரை கேர்டேக்கரிடம்(இடைக்கால ஆட்சியாளர்) ஆட்சியை ஒப்படைக்க வேண்டும்.

முபாரக்கின் பேச்சு ஏமாற்று வேலையாகும். அவர் ஆட்சியை விட்டு போக விரும்பவில்லை. இந்த நகரத்தில் மக்களைப் பாருங்கள். அவர் எதனை விரும்புகிறார்கள் என்று. முபாரக் தொடர்ந்து தந்திர விளையாட்டை ஆடிவருகிறார். எகிப்தின் வேதனையை அதிகரிக்க அவர் விரும்புகிறார். அவர் ஆட்சியில் தொடர்வது மக்களின் கோபத்தை அதிகரிக்கச் செய்யும். யார் அவருக்கு ஆலோசனை வழங்குகின்றார்களோ அவர்கள் தவறான யோசனையையே வழங்குகின்றனர்." இவ்வாறு எல்பராதி தெரிவித்துள்ளார்.

செய்தி:presstv

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக