லண்டன்,பிப்.3:எகிப்து நாட்டில் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கெதிராக போராட்டம் நடத்துவோருக்கு முழு ஆதரவை அளிப்பதாக பிரபல ஹாலிவுட் நடிகர் உமர் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
பி.பி.சிக்கு அளித்தப்பேட்டியில் 78 வயதான எகிப்து வம்சாவழியைச் சார்ந்த உமர் ஷெரீப் கூறியதாவது: 'தோல்வி பயம் பிடித்து அதிகாரத்தை கட்டிபிடித்துக் கொண்டுள்ளார் ஹுஸ்னி முபாரக்.
எகிப்தில் ஜனநாயகத்தைக் குறித்து அதிகம் பேசப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. முபாரக் இனிமேலும் தேர்தலில் போட்டியிட்டால் பெரும்பான்மையான எகிப்தியர்கள் அவரை ஆதரிக்கமாட்டார்கள். எகிப்தில் இரத்தக்களரி ஏற்படாது என நம்புகிறேன். அமெரிக்காவும், இஸ்ரேலும் இனிமேலும் எகிப்தை ஆதரிக்காது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி:மாத்யமம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக