மூங்கிலில் இருந்து சைக்கிள்களை தயாரிக்கும் திட்டம் ஒன்று கானாவில் ஆரம்பமாகவுள்ளது. இவ்வாறான திட்டம் ஒன்று உலகத்தில் இடம்பெறுவது இதுவே முதன்முறை. முதற்கட்டமாக இவர்கள் 750 மூங்கிலான சைக்கிள்களை உருவாக்கவுள்ளனர்.
கட்டுமானத்திற்கு மிகவும் ஏற்ற பொருளான மூங்கில்களை கொண்டு சைக்கிள் சட்டங்களை உருவாக்க முடியும். மூங்கிலால் ஆன சட்டங்கள் இலகுவாக இருப்பதோடு, எஃகுவை விட வலுவாக இருக்கிறது. அத்தோடு விலையும் கார்பன் இழைகளை விட குறைவு. பேம்பு பைக்ஸ் லிமிட்டட் என்ற நிறுவனம் ஆப்ரிக்க சந்தைக்காக இந்த மூங்கில் சைக்கிள்களை தயாரிக்கவுள்ளது.
இந்த திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர் கொலம்பிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜான் மட்டர், இந்த திட்டத்தின் நோக்கமே, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மிக மோசமாக தயாரிக்கப்பட்ட சைக்கிள்களுக்கு மாற்றாக குறைந்த விலையில் நல்ல தரமுள்ள சைக்கிள்களை இங்கே தயாரிக்க வேண்டும் என்பது தான் என்றார்.
இங்குள்ள மக்களுக்கு தரமான சைக்கிள்களை உருவாக்கி கொடுப்பதால், அறுவடையான பயிர்களை சந்தைகளுக்கு எடுத்து செல்ல முடியும், சுகாதார வசதிகளை தேடி செல்ல முடியும், கல்விசாலைகளுக்கு செல்ல முடியும்.
மூங்கில் சைக்கிளை உருவாக்கி வெள்ளோட்டம் பார்ப்பதற்கு கிட்டதட்ட இரண்டாண்டுகள் பிடித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் கற்று கொண்ட பாடங்களை கொண்டு உற்பத்தி கட்டத்தில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் செய்யப்படும். அதன் பின்னரே பெரும் சந்தைக்கான வர்த்தக ரீதியான உற்பத்தி நடைபெறும்.
செய்தி நன்றி:-
BBC News
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக