21 பிப்ரவரி 2011

அதிமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள்

சென்னை: அதிமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவு தான் மனிதநேய மக்கள் கட்சியாகும்.

தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என்று இக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளும், அதிமுக தேர்தல் பணிக் குழுவினரும் சனிக்கிழமை சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்தினர். அப்போது மனிதநேயக் கட்சி 5 தொகுதிகள் கேட்டது.

இதையடுத்து நேற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை ஜவாஹிருல்லாஹ் மீண்டும் சந்தித்துப் பேசியதையடுத்து தொகுதிப் பங்கீடு எட்டப்பட்டது.

இதன்படி மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகளை ஜெயலலிதா ஒதுக்கினார். அப்போது இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பி.அப்துல் சமது, பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீது, தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர் அலி, பொருளாளர் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையடுத்து நிருபர்களிடம் பேசிய ஜவாஹிருல்லாஹ்,
அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து முடிந்துள்ளது. மனிதநேய மக்கள் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்துள்ளது. தேர்தலில் ஆணையம் ஒதுக்கும் தனி
சின்னத்தில் எங்கள் கட்சி போட்டியிடும் என்றார்.

அதிமுக கூட்டணியில் கட்சிகள்-இடங்கள்:

இதுவரை அதிமுக அணியில் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள கட்சிகள் விவரம்

மனித நேய மக்கள் கட்சி -3

புதிய தமிழகம் -2

இந்திய குடியரசுக் கட்சி -1

மூவேந்தர் முன்னணிக் கழகம் -1

http://www.tmmk.in/  செய்தி  ......


சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் அதிமுகவின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா, பொதுச் செயலளார் எஸ்.ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யு. ரஹ்மதுல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அதிமுக பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, அதிமுக தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆகியோரும் உடன் இருந்தனர். அப்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் போட்டியிடுவது என இரு கட்சிகளுக்கு இடையே கையெழுத்தானது.

மேலும் புதுவை சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு இடம் அளிக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா உறுதி அளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக