லண்டன் : நம்மால் 40 டிகிரி வெப்பத்தையே தாங்க முடியவில்லை. இந்நிலையில், 3,200 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொளுத்தும் கிரகம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். விண்ணில் வெப்பமான கிரகமாக இது கருதப்படுகிறது. இங்கிலாந்தின் ஸ்டாபோர்டுஷயரில் உள்ள கீலே பல்கலைக்கழக பேராசிரியர் அலெக்சிஸ் ஸ்மித் தலைமையிலான குழுவினரின் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கிரகம், டபிள்யூஏஎஸ்பி 33பி அல்லது எச்டி15082 என்று அழைக்கப்படுகிறது.
கடந்த 2006 ஆண்டிலேயே இந்த கிரகம் இருப்பதை அறிவித்தனர். கேனரி தீவிலிருந்து வில்லியம் ஹெர்ஸ்செல் டெலஸ்கோப் மூலம் தொடர்ந்து அதை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், அதிகாரப்பூர்வமாக இதன் வெப்பநிலையை உறுதி செய்து உள்ளனர். இது ஜுபிடர் கிரகத்தைப் போல நான்கரை மடங்கு பெரியது. 380 ஒளியாண்டு தொலைவில் இது உள்ளது.
இது தன்னைத்தானே சுற்றி வர 29.5 மணி நேரம் ஆகிறது. இது 3200 டிகிரி வெப்பநிலையைக் கொண்டிருந்தாலும், நட்சத்திரங்களின் வெப்பநிலையான 7,160 டிகிரியைவிடவும், சூரியனின் வெப்பநிலையான 5,600 டிகிரி வெப்பநிலையை விடவும் குறைவுதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக