24 ஜனவரி 2011

மகரஜோதி மோசடியை தடுத்து நிறுத்த உச்சநீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி,ஜன.23:சபரி மலையில் மகரஜோதி மோசடியை தடுத்து நிறுத்த மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டுமெனக்கோரி இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கத்தின் தலைவர் ஸனல் இடமருகு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேரளமாநில அரசு, மாநில தேவஸம்போர்டு(அறநிலையத்துறை), மாநில மின்சார வாரியம், மாநில வனத்துறை, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்ட்ரா அரசுகள்,மத்திய வனத்துறை அமைச்சகம் ஆகியோரின் மீது குற்றஞ்சாட்டி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அற்புத ஜோதி என்ற பெயரில் சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகரவிளக்கை எரியவிடும் நடவடிக்கையை நிறுத்துவதற்கு கேரள மாநில அரசு, திருவிதாங்கூர் தேவஸம்போர்டு, மாநில மின்சார வாரியம், மாநில வனத்துறை ஆகியவற்று உத்தரவு பிறப்பிக்க இம்மனுவில் கோரப்பட்டுள்ளது.


மகரவிளக்கு அற்புதமில்லை எனவும், அது மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் என தமிழ்நாடு, கர்நாடகா, மஹராஷ்ட்ரா, ஆந்திரா மாநில அரசுகள் தங்களது மாநில மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்பது இம்மனுவில் கோரப்பட்டுள்ள இரண்டாவது கோரிக்கையாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக